நாளை 50 ஆயிரம் ரெம்டெசிவர் குப்பிகள் வந்துசேரும். மருந்து விற்பனை ஒழுங்குமுறைபடுத்தப்படும். அமைச்சர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published May 15, 2021, 5:07 PM IST
Highlights

முதல்வர் உறுதி அளித்ததை நிறைவேற்றும் வண்ணம் தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடங்கி இருக்கிறது. ஒரு நாளுக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கி நிவாரணம் வழங்கப்படுகிறது. 

தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணம் முதல் தவணையாக  ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு  ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, 

முதல்வர் உறுதி அளித்ததை நிறைவேற்றும் வண்ணம் தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடங்கி இருக்கிறது. ஒரு நாளுக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கி நிவாரணம் வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக மீதமுள்ள 2,000 ரூபாயும் வழங்க உள்ளோம். கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும் உரிய டோக்கன் வழங்கி அவர்களை தவிர குடும்பத்தில் வேறு யாரும் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

ரெம்டெசிவர் மருந்தை பொருத்தவரை மத்திய தொகுப்பிலிருந்து 7 ஆயிரம் குப்பிகள் வழங்கப்படுகிறது, முதல்வரின் விரைவான நடவடிக்கை முயற்சியால் நாளை 50,000 குப்பிகள் வந்து சேரும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது என்றார். நேரு விளையாட்டரங்கில் விற்பனை செய்யும் ரெம்டெசிவர் தடுப்பு மருந்து விற்பனையை ஒழுங்கு முறைப்படுத்த மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினரை அழைத்து உண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

click me!