அடி தூள்.. மாணவர்களுக்கு இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறு என்ன இருக்க முடியும். வீட்டுக்கே வரபோகும் ஆசிரியர்கள்

By Ezhilarasan BabuFirst Published Oct 18, 2021, 12:20 PM IST
Highlights

தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே காலம் கழித்து வந்த நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை போக்க அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும்

தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே காலம் கழித்து வந்த நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை போக்க அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் " இல்லம் தேடி கல்வி "  திட்டத்தை தொடங்குவது தொடர்பாக முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.  1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவர்களுக்கு  நவம்பர்1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.  

அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும், அவர்களிடம் கற்றல் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை களைவதற்கும் நடப்பு கல்வி ஆண்டுக்கான பட்ஜெட்டில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில்  நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அவர்களுக்கான கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை தன்னார்வலர்கள் கைக்கொண்டு மாணவர்களின் இல்லங்களுக்கே சென்று பாடம் நடத்தும் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்: விஜயபாஸ்கர் வீட்டு வாசலில் பரபரப்பு.. போலீசுடன் மோதிய அதிமுக வழக்கறிஞர் அணி.. அசைக்க முடியாது என சவால்.

இதையும் படியுங்கள்:  அமைச்சராக இருந்த 5 ஆண்டில் 60 கோடி சொத்து குவிப்பு.. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், மனைவி மீது FIR.

இந்த திட்டம் குறித்து அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, இந்நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன் இன்ற பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆலோசனைக்குப் பின்னர் இன்று மாலை இந்த திட்டம் தொடங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!