விஜயபாஸ்கர் வீட்டு வாசலில் பரபரப்பு.. போலீசுடன் மோதிய அதிமுக வழக்கறிஞர் அணி.. அசைக்க முடியாது என சவால்.

By Ezhilarasan BabuFirst Published Oct 18, 2021, 12:01 PM IST
Highlights

 ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பதவி கொடுத்துள்ளதாகவும், ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தலைமயிலான திமுகவின் ஆட்சி தான் எனவும் அவர் விமர்சித்தார்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இல்லத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருவதாகவும், இதை சட்டப்படி சந்திக்க தயார் என்றும் அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பாபு முருகவேல் கூறியுள்ளார். முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படியுங்கள்: அமைச்சராக இருந்த 5 ஆண்டில் 60 கோடி சொத்து குவிப்பு.. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், மனைவி மீது FIR.

இந்நிலையில் அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பாபு முருகவேல் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், வழக்கறிஞர் செல்வம் உள்ளிட்டோர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்திற்கு வருகை  தந்தனர். அப்போது அவர்கள் அவர்கள் உள்ளே செல்ல முயன்றபோது, அவர்களே உள்ளே அனுமதிக்காததால் அவர்கள் அங்கிருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பாபு முருகவேல்,  அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாடி கட்சி எழுச்சி பெறும் நிலையில், அதிமுக மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான வழக்கு பதிவு செய்து இந்த சோதனை நடைபெறுகிறது என்றார். மேலும் இதை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளதாகவும் கூறிய அவர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி மற்றும் மகள்களுக்கு கொரோனா நோய் தோற்று ஏற்பட்டு அவர்கள் ஓய்வில் இருந்து வரும் நிலையில், அவரது வீட்டில் மனிதநேயமற்ற முறையில் இந்த சோதனையை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்தி வருவதாக கூறினார். 

இதையும் படியுங்கள்: முதல்வருக்கு அடுத்தடுத்து போன் போட்ட பிரதமர் மோடி, அமித்ஷா.. நம்பிக்கை கொடுத்த அந்த ஒற்றை வார்த்தை.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், திமுக ஆட்சி முறையற்ற முறையில் நடைபெற்று வருவதாகவும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பதவி கொடுத்துள்ளதாகவும், ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தலைமயிலான திமுகவின் ஆட்சி தான் எனவும் அவர் விமர்சித்தார். அதை தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் மற்றும் குறிப்பிட்ட சோத்துக்களுக்கு சரியான ஆவணங்கள் உள்ளது என்றார். எனவே மடியில் கனமில்லை வழியில் பயமில்லை, சட்டப்படி இந்த ரெய்டை சந்திக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
 

click me!