தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.. எப்போது வேண்டுமானாலும் பிச்சு உதறுமாம்

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2021, 12:24 PM IST
Highlights

தென்மேற்கு பருவ காற்று காரணமாக 09.09.2021 முதல் 13.09.2021 வரை : தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு பருவ காற்று காரணமாக 09.09.2021 முதல் 13.09.2021 வரை : தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13.09.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தேவலா (நீலகிரி) 16, பந்தலூர்  (நீலகிரி) 8, மேல்  கூடலூர்  (நீலகிரி) 5, கூடலூர்  பஜார்  (நீலகிரி) 4,பிறையார் எஸ்டேட்  (நீலகிரி)  3, சேலம்  (சேலம்), ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா  2, சின்னக்கல்லார்  (கோவை), வால்பாறை  (கோவை), பெரியாறு  (தேனி), அவலாஞ்சி  (நீலகிரி), மேல்பவானி (நீலகிரி) தலா 1. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்க கடல் பகுதிகள் 09.09.2021 முதல் 11.09.2021 வரை: தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 12.09.2021,13.09.2021:  மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். அரபிக்கடல் பகுதிகள்: 09.09.2021 முதல் 13.09.2021 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!