#BREAKING தமிழகத்தில் 2 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு.. வெல்லப்போது யார்?

By vinoth kumarFirst Published Sep 9, 2021, 12:22 PM IST
Highlights

தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. அதிமுகவின் முகமது ஜான் மறைவாலும், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்கள் ஆனதாலும் இந்த 3 இடங்களுக்கு காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன. 

தமிழத்தில் மீதமுள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. அதிமுகவின் முகமது ஜான் மறைவாலும், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்கள் ஆனதாலும் இந்த 3 இடங்களுக்கு காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த 3 காலி பணியிடங்களுக்கான தேர்தலை ஒன்றாக நடத்துவதாக அல்லது தனித்தனியாக நடத்துவதா என்ற குழப்பம் ஏற்பட்டது. 

இந்நிலையில், ஒரு காலி பணியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், போட்டியின்றி  திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா வெற்றி பெற்றார். அடுத்தக்கட்டமாக தற்போது கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்த காலி இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில், அக்டோபர் மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி செப்டம்பர் 22ம் தேதி முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 23ம்  வேட்புமனு பரிசீலனை, செப்டம்பர் 27ம் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

click me!