விடுதிகளை காலி செய்ய மாணவர்களுக்கு எச்சரிக்கை: இல்லை என்றால் இதுதான் நடக்கும், அண்ணா பல்கலைக்கழகம் கெடு.

Published : Nov 10, 2020, 12:17 PM IST
விடுதிகளை காலி செய்ய மாணவர்களுக்கு எச்சரிக்கை: இல்லை என்றால் இதுதான் நடக்கும், அண்ணா பல்கலைக்கழகம் கெடு.

சுருக்கம்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடவியல் மற்றும் திட்டமிடல் கல்லூரிகளின் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் தங்கள் உடைமைகளை விடுதி அறைகளிலேயே விட்டு விட்டு, அனைவரும் அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். 

நவம்பர் 16-ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால், விடுதி அறைகளை சுத்தம் செய்து, புனரமைக்கும் பணியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டுள்ளன. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடவியல் மற்றும் திட்டமிடல் கல்லூரிகளின் விடுதிகள்செயல்பட்டு வருகின்றன. 

விடுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், மாணவர்கள் வரும் 21-ம் தேதிக்குள் விடுதி அறைகளை காலி செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. வரும் 21-ம் தேதிக்குள் விடுதி அறைகளை காலி செய்யாவிட்டால், மாணவர்களின் அறைகளில் உள்ள உடைமைகள், உடைமை பாதுகாப்பு அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!