அமைச்சருக்கு கட்டம் சரியில்ல! வம்பிழுத்து வெளாடுறதே வேலையா போச்சு: சுகாதாரதுறையை சுளுக்கெடுக்க தயாராகும் கைகள்.

By Vishnu PriyaFirst Published Oct 15, 2019, 6:38 PM IST
Highlights

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஓவராய் பேசிக் கொண்டிருந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த சில நாட்களாக ஸீனிலேயே இல்லை  கவனித்தீர்களா. எல்லாம் டெல்லி வெச்ச குட்டுதான். 

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஓவராய் பேசிக் கொண்டிருந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த சில நாட்களாக ஸீனிலேயே இல்லை  கவனித்தீர்களா. எல்லாம் டெல்லி வெச்ச குட்டுதான். இன்னும் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கிறது தமிழகம். வரும் பொது தேர்தல் மூலம் தமிழகத்தில் அதிகார ரீதியில் கால் பதிக்க காத்திருக்கிறது பா.ஜ.க. இந்நிலையில், அவர்கள் கூட்டணியிலிருக்கும் அ.தி.மு.க.வின் அமைச்சரான  ராஜேந்திர பாலாஜியின் தாறுமாறு பேச்சினால் கூட்டணியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவதை டெல்லியால் சகிக்க முடியவில்லை. 


ரா.பா.வின் ரவுசான வார்த்தைகளை பற்றி டெல்லிக்கு புகார் போக, அவர்கள் முதல்வரை அழைத்து ஸ்க்ரூ ஏற்ற, அவரோ ரா.பா.வை அழைத்து ‘கம்முன்னு இருங்க!’ என்று சொல்லிவிட்டார். இதுவே ராஜேந்திர பாலாஜியின் அமைதிக்கு காரணம். இந்த நிலையில், தமிழக அமைச்சரவையின் இன்னொரு அமைச்சரும் டெல்லியின் கோவத்துக்கு ஆளாகி இருக்கிறார். அவர், சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர்.  தனது சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கிடைக்காமல் செய்தார்! எனும் புகாரினால் இவர் மீது பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இரண்டுமே செம்ம கடுப்பில் உள்ளனர். ஏற்கனவே குட்கா விவகாரத்திலும், தொடர் ரெய்டு பிரச்னைகளிலும் இவர் தலை உருண்டு கிடப்பதாலும் பா.ஜ. இவர் மீது கடுப்பிலிருக்கிறது. 


இந்த நிலையில் விஜயபாஸ்கர், தமிழக அமைச்சரவைக்குள்ளும் அதிருப்தியை சந்தித்து வருகிறாராம் தொடர்ச்சியாக. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலது, இடது கரங்களாக இருக்கும் வேலுமணி மற்றும் தங்கமணி இருவரிடமுமே முறைப்பை வளர்த்துக் கொண்டுவிட்டாராம் விஜயபாஸ்கர். சமீபத்தில் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்ட டெங்கு விழிப்புணர்வு நிகழ்வில், சுகாதாரத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் உள்ளாட்சி துறை அதிகாரிகளை விரட்டி விரட்டி வேலை வாங்கினாராம். இதில் வேலுமணி அப்செட். அந்த விழாவில், தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் மிக குறைவு! என்ற ரீதியில் பேசிய விஜயபாஸ்கர் ‘கொசு கடிக்கும் வரையில் உள்ளாட்சி துறையின் வேலை, கொசு கடித்த பின்புதான் சுகாதாரத்துறையின் வேலை!’ என்று சொல்லி, டெங்கு கொசுவை ஒழிக்கும் பொறுப்பு உள்ளாட்சி துறையிடம்தான் உள்ளது, அவர்களை மாநிலத்தை சுத்தமாக வைக்க சொல்லுங்கள் மக்களே! எனும் பொருள் பட பேசிவிட்டதாக வேலுமணி கர்ஜித்திருக்கிறார். மக்கள் மத்தியில் ‘நோய் பரவலுக்கு காரணம் உள்ளாட்சி துறையே!’ எனும் ரீதியில் விஜயபாஸ்கர் பேசிவிட்டதாக கடுப்பாகி இருக்கிறார். 


அதேபோல் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் துறையிலும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தலையீடுகள் இருப்பதாக அவரும் கடுப்பில் இருக்கிறார். ’நம்மளை வம்பிழுக்கிறதே  விஜயபாஸ்கருக்கு வேலையா போச்சு!’ என்று கருவியிருக்கின்றனர். எனவே இருவருமே விஜய்பாஸ்கரைப் பற்றி, முதல்வரிடம் பெரிய புகார்ப்பட்டியலை வாசித்துள்ளனராம். முதல்வருக்கு அடுத்த அதிகார மையங்களான கொங்கு அமைச்சர்கள் இருவரையும் பகைத்துக் கொள்வது என்பது சாதுர்யமான அரசியல் இல்லை! என்று விஜயபாஸ்கரிடம் அவரது ஆட்கள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். 
என்னாகுதுன்னு பார்ப்போம்!

click me!