விக்கிரவாண்டிக்கு நாலாயிரம்! நாங்குநேரிக்கு ரெண்டாயிரம்! உள்ளாட்சிக்கு பிம்பிலிக்கி பிலாப்பி: ஆளுங்கட்சியின் அடேங்கப்பா அதிரடிகள்.

By Vishnu PriyaFirst Published Oct 15, 2019, 6:31 PM IST
Highlights

அக்டோபர் மாத இறுதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்!- இது கோர்ட்டின் உத்தரவு. ஆனால், மாத இறுதிக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், தேதியை உறுதிப்படுத்துவதற்கான முடிவில் தமிழக ஜரூராய் இருப்பதாய் தெரியவில்லை.

அக்டோபர் மாத இறுதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்!- இது கோர்ட்டின் உத்தரவு. ஆனால், மாத இறுதிக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், தேதியை உறுதிப்படுத்துவதற்கான முடிவில் தமிழக ஜரூராய் இருப்பதாய் தெரியவில்லை. இவ்வளவு நெருக்கடி சூழல் உருவாகிய நிலையிலும், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் எடப்பாடி அரசு எஸ்கேப் ஆகிக் கொண்டே இருக்க காரணம்?...’தோல்வி பயம்தான்! வேறென்ன? நாடாளுமன்ற தேர்தல்களில் கிட்டத்தட்ட வாஷ் அவுட் ஆகிட்டோம், வேலூர் தேர்தலிலும் தோத்தாச்சு, ஆக மக்கள் ஆதரவு நமக்கு சரியாக இல்லாமலிருக்கும் இந்த சூழலில் உள்ளாட்சி தேர்தலையும் நடத்தி, அதில் தோத்துட்டால் எதிர்வரும் பொது தேர்தலிலும் இதே நிலை தொடர்ந்திடுமே! என்று அ.தி.மு.க. பதறுகிறது. அதனாலேயே உள்ளாட்சி தேர்தலை தள்ளிக் கொண்டே போகிறது. 


இதனால்தான் சமீபத்தில் ஸ்டாலின் கூட ‘அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடக்காது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கண்டிப்பாக  அது நடத்தப்படும்.’ என்று கடுப்பாய் சொல்லியிருந்தார்.’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்தநிலையில்தான் விக்கிரவாண்டி, நாங்குநேரி என இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்கிறது தமிழகம். இதில் இரண்டிலுமே அ.தி.மு.க. களமிறங்குகிறது. இந்த தேர்தலின் முடிவால், நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் இதில் தோற்றால் அது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் வெற்றியை பாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள். 


அதனால்தான் சில அதிரடி, அடேங்கப்பா முடிவுகளை எடுத்துள்ளனர்! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அது என்ன முடிவு?.....”இரண்டு இடைத்தேர்தல் தொகுதிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்! எனும் வெறியிலிருக்கிறது அ.தி.மு.க. அதனால் வாக்காளர்களை வகையாக கவனிக்க முடிவு செய்துள்ளனர் தேர்தல் பணியாற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள்.  விக்கிரவாண்டியில் வாக்குக்கு ரெண்டு பெரிய ரோஸ்கலர் நோட்டும் (நான்காயிரம் ரூபாய்), நாங்குநேரியில் வாக்குக்கு ஒரு பெரிய ரோஸ்கலர் நோட்டும் (ரெண்டாயிரம் ரூபாய்) தர முடிவு செய்துள்ளார்கள். 
நாங்குநேரியை விட விக்கிரவாண்டி அப்படி என்ன உசத்தி? ஏன் இந்த பாரபட்சம்? என்றால்.....விக்கிரவாண்டியில்தான் அ.தி.மு.க.வுடன் தி.மு.க. நேரடியாக மோதுகிறது. ஆனால் நாங்குநேரியிலோ காங்கிரஸ்தான் மோதுகிறது. எனவே விக்கிரவாண்டியில் தி.மு.க. முழு எதிர்ப்பை கொடுக்கும், வலு காட்டும், மேலும் அக்கட்சியும் வாக்காளர்களை ’பெரிதாய் கவனிக்கும்’. இதை சமாளிக்கத்தான் பெரிய ரோஸ் கலர் நோட்டு ரெண்டு தர இருக்கிறார்கள். 


ஆனால் நாங்குநேரியில் காங்கிரஸ் கை விளங்க மக்களுக்கு எதையும் பெரிதாய் தந்துவிடாது!நோகாமல் நோம்பி கும்பிட பார்ப்பார்கள்! எனவே அங்கே குறைவாய் பணத்தை கொட்டினால் போதும்! என்று முடிவு செய்துவிட்டார்கள். “ என்கிறார்கள். சரி விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் இவ்வளவு சிரத்தைக் காட்டும் தமிழக அரசு, தமிழகம் முழுக்க எப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்தப்போகிறது?  என்று கேட்டால்.... “ம்ம்ம்....பிம்பிளிக்கி பிலாக்கிதான். ஸ்டாலின் சொன்னது போல் அப்படியே காலத்தைக் கடத்திக் கொண்டு போய்விடுவார்கள். அல்லது, இரண்டு தொகுதிகளிலும் ஒருவேளை தாங்களே வெற்றி பெற்றுவிட்டால், அந்த குஷி சூட்டோடு உள்ளாட்சி தேர்தலை அறிவித்து வெற்றியடையவும் வெறித்தனம் காட்டுவார்கள்.” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 
வாவ்! வாட் அன் அரசியல்?

click me!