அடி தூள்... ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2021, 9:22 AM IST
Highlights

6 ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 74.37 சதவீத வாக்குகளும், 9 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குபதிவில் சரியாக  78. 47 சதவீத வாக்குகளும் பதிவானது. இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.35  சதவீதமும் குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 69.34 சதவீத வாக்குகளும் பதிவாகின

இரண்டு கட்டங்களாக நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 11 மணிக்குள் ஓரளவுக்கு வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.நிறுத்திவைக்கப்பட்டிருந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தம் 74 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.6 ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 74.37 சதவீத வாக்குகளும், 9 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குபதிவில் சரியாக  78. 47 சதவீத வாக்குகளும் பதிவானது. 

இதையும் படியுங்கள் : இமயமலைபோல் உள்ள அதிமுகவை பரங்கிமலைபோல் உள்ள சீமான் விமர்சிப்பதுதான் சிறந்த காமெடி.. எகிறி அடித்த ஜெயக்குமார்.

இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.35  சதவீதமும் குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 69.34 சதவீத வாக்குகளும் பதிவாகின. அதேபோல் வாக்கு  எண்ணிக்கை நடைபெறும் வளாகத்தில் கம்பி வலைகள், மரத்தாலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலையில் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, அது விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நடந்து வருகிறது, ஒவ்வொரு சுற்றின் முடிவுகளுக் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட உள்ளது. ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப 40 மேசைகள் வரை போடப்பட்டுள்ளன. முதலில் வாக்குச்சீட்டுகள் நிறங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பின்னர் எண்ணிப்பட உள்ளது.

இதையும் படியுங்கள் : அடகடவுளே.. இந்த தக்காளிக்கு வந்த வாழ்வை பாருங்க ..? ஒரு கிலே 80 ரூபாய்க்கு விற்பணை..

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அந்தந்த அறை மேற்பார்வையாளர்கள் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் வட்டார பார்வையாளர்களுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அந்த முடிவுகள் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து மாநில தேர்தல் ஆணையருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்  வாக்குகள் எண்ணப்பட்டு வட்டார பார்வையாளர் ஒப்புதலுடன் வெற்றி தோல்வி விவரங்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யவும் ஸ்ட்ரீமிங் மூலம் மாநில தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் பிற்பகல் 11 மணிக்குள் ஓரளவுக்கு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!