மீண்டும் களத்தில் சின்னச்சாமி… அதிமுகவில் முக்கிய பதவியை அள்ளி கொடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்

Published : Oct 12, 2021, 08:11 AM IST
மீண்டும் களத்தில் சின்னச்சாமி… அதிமுகவில் முக்கிய பதவியை அள்ளி கொடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்

சுருக்கம்

அதிமுகவில் அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை: அதிமுகவில் அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஜெயலலிதா ஆட்சியின் போது அவருக்கு அடுத்த நிலையில் துணை பொது செயலாளராக இருந்தவர் எம். சின்னச்சாமி. கரூர் மாவட்டத்தின் செயலாளர், தொழில்துறை அமைச்சர், எம்பி என பல பதவிகளை வகித்தவர்.

பின்னர் அதிமுகவில் இருந்து 2010ம் ஆண்டு விலகி திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். திமுகவின் மாநில விவசாய அணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.

 2014ம் நாடாளுமன்ற தேர்தலில் தம்பிதுரையிடம் தோற்றார். அதன் பின்னர் மீண்டும் அதிமுக முகாமுக்கு தாவினார். இந் நிலையில் அதிமுகவின் அமைப்பு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். புதிய அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள சின்னச்சாமிக்கு கரூர் மாவட்ட அதிமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..