22 எதிர்க்கட்சிகள் கோரிக்கை... நிராகரித்த தேர்தல் ஆணையம்..!

By vinoth kumarFirst Published May 22, 2019, 6:00 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகைகளில் குளறுபடி ஏற்பட்டால் விவிபேட்டில் பதிவாகியுள்ள அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகைகளில் குளறுபடி ஏற்பட்டால் விவிபேட்டில் பதிவாகியுள்ள அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நாளை எண்ணப்படுகிறது. இந்நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை எண்ண துவங்குவதற்கு முன்பு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை எண்ண வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். 

இந்த கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அப்போது ஒருவேளை எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருந்தால், ஓட்டு எண்ணிக்கை துவங்குதற்கே பிற்பகல் ஆகலாம், மேலும் முன்னிலை நிலவரம் வெளியாக மாலை ஆகலாம் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தேர்தல் முடிவுகள் தாமதமானால் அதுவும் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்து விட வாய்ப்பு உள்ளதால் எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்தனர். 

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற கூடிய நடைமுறையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

click me!