டி.வி டிபேட் பேச்சாளர்களுக்கு கடும் கிராக்கி..! அலைமோதும் செய்தி தொலைக்காட்சிகள்..!

By Thiraviaraj RMFirst Published May 22, 2019, 5:02 PM IST
Highlights

 போட்டி போட்டுக் கொண்டு தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் டிபேட் பேச்சாளர்களை புக் செய்து விட்டதால் மண்டையை பிய்த்துக் கொண்டு உள்ளனராம் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள். 

இரவு 8 மணிக்கு மேல் டி.வியை திறந்தால் அதிரடி சரவெடிக்கு பஞ்சமில்லாமல் செய்தி சேனல்கள் ஒரு விவாத நிகழ்ச்சியில் 4 முதல் ஐந்து பேர் பங்கேற்க வைத்து கடையை திறந்து விடுகின்றனர்.

2011ம் ஆண்டும் புதியதலைமுறை தொலைக்காட்சி ஆரம்ப்பிக்கப்பட்டதில் இருந்தே இந்த விவாத ஜுரம் தமிழ்நாட்டை தொற்றிக் கொண்டது. அதற்கு அடுத்தடுத்து ஆரம்பிக்கப்பட்ட தந்தி டிவி நியூஸ்-7, தற்போது நியூஸ் -18 அதற்கு முன்பு தொடங்கப்ப்பட்ட சத்தியம் டிவி சன் நியூஸ் தொலைக்காட்சிகளிலும் விவாத கலாச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. 

புதியதலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பின் மிகப்பெரிய பிரபலங்களாக மாறிவிட்டவர்களில் ஆவடி குமார், ஐடியா அய்யாக்கண்ணு, பானு கோம்ஸ், அய்யநாதன், இந்தியா டுடே மணி, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். சி.ஆர்.சரஸ்வதி ஏற்கெனவே திரைப்பட நடியாக இருந்தாலும், டிபேட் வெளிச்சத்தில் தான் மிக மிக பிரபலமாகி போனார். 

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோ.சமரசம், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு  காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா, அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட ஏற்கெனவே அரசியல் பிரபலமாக இருந்தவர்களும்,  ஹாட் ஃபைட்டுக்கு சொந்தக்காரர்களான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அருணன் ஆகியோரும் இந்த டிவி டிபேட்டுகளால் மேலும் பிரபலமாகினர். 

இந்த நிலையில், தற்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா முடிந்து தேர்தல் முடிவுகளுக்காக மக்கள் காத்திருக்கும் நிலையில், முடிவுகளை அறிவிக்கும் பரபர வேலைகளில் தொலைக்காட்சிகள் மும்மரமாக களத்தில் குதித்துள்ளன. ஒரே முடிவுதான்... ஆனால் அந்த முடிவை யார் விரைந்து சொல்லப்போகிறோம். எப்படி வித்தியாசமாக சொல்லப்போகிறோம் என வரிந்து கட்டி களத்தில் குதித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாகத்தான் டிவி டிபேட்டில் பங்கேற்கும் பத்திரிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமாத்துறையினருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. 

மூத்த பத்திரிக்கையாளரான மணி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் அன்று மட்டும் 5 முதல் 7 தொலைகாட்சி விவாதங்களில்  பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளாராம். அதேபோன்று தான் அரசியல் விமர்சகரான ரவீந்திரன் துரைசாமியும் ஒரே நாளில் 5 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க உள்ளாராம். இதே நிலைமையில் தான் அனைத்து டி.வி. டிபேட் பங்கேற்பாளர்கள் உள்ளனராம். போட்டி போட்டுக் கொண்டு தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் டிபேட் பேச்சாளர்களை புக் செய்து விட்டதால் மண்டையை பிய்த்துக் கொண்டு உள்ளனராம் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்.

click me!