அதிமுக - பிஜேபி கூட்டணியில் சீட் வாங்கும் தினகரனின் ஆதரவாளர் வைகுண்டராஜன்... நெருக்கடியை சமாளிக்க நெல்லை தொகுதி!!

By sathish kFirst Published Feb 21, 2019, 5:10 PM IST
Highlights

அதிமுக - பிஜேபி கூட்டணி மீது அரசியல் கட்சிகள் பல விமர்சனங்களை வைத்தாலும், படு மந்தமாக இருக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை விட பலமடங்கு வேகமெடுத்து, கூட்டணி அமைப்பதிலும் தொகுதி பிரிப்பதிலும் செம்ம பிசியாக இருந்து வருகிறது. 

அதிமுக கூட்டணியில், தேமுதிக, மற்றும் பிற கட்சிகளை இணைக்க, தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக, கூட்டணியில், பிஜேபி மற்றும் பாமக, இடம் பெற்றுள்ளன. தேமுதிக,வுடனான பேச்சில், இழுபறி நீடிக்கிறது. அதேபோல், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமாகா, போன்ற கட்சிகளுடனும், ரகசிய பேச்சும் நடந்து வருகிறது.

அதிமுக கூட்டணியில் பிஜேபிக்கு மொத்தம் 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது அதிமுக. அதில் முக்கியமான தொகுதியான நெல்லைத்த தொகுதியைக் கைப்பற்ற பிஜேபியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் சீட் வாங்க காய் நகர்த்தியுள்ள நிலையில், விவி மிரரால்ஸ் ஓனர் வைகுண்ட ராஜன் தனது மகனை நிறுத்த காய் நகர்த்தி வருகிறாராம்.

அதிமுக. புள்ளிகளின் உறக்கத் தைக் கெடுக்கும் அடுத்த புள்ளி வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன். டெல்லியில் தனக்கான காரியங்களை சாதிப்பதற்காகத் தான், ஜெ.விடம் தனக்கிருக்கும் செல்வாக் கைப் பயன்படுத்தி, சசிகலா புஷ்பாவை ராஜ்ய சபா எம்.பி.யாக்கினார் வைகுண்டராஜன். ஆனால் சசிகலாபுஷ்பாவோ, தன்னை சேப்டியாக்கிக்கொள்ளவே கவனம் செலுத்தினார், திடீரென ஜெ.வுக்கு எதிராக சீறினார், கணவரை விவாகரத்து செய்த அவர் பேராசிரியர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இதையெல்லாம் பார்த்து வைகுண்ட ராஜன் கடுப்பில் இருந்த போதுதான், கார்னெட் மணல் ஏற்றுமதிக்கு  வெட்டு வைத்தது மத்திய அரசு. சில மாதங்களுக்கு முன்பு, வி.வி மினரல்சில் IT ரெய்டு, ஏகப்பட்ட டாக்குமெண்ட்டுகள் கைப் பற்றல், இவற்றால் ரொம்பவே நொந்து போய்விட்டார் வைகுண்டராஜன்.

இந்த மாதிரி சோதனைகளையெல்லாம் சமாளிக்க வேண்டும் என எண்ணிய வைகுண்டராஜன், தனது மூத்தமகன் சுப்பிரமணியனை எம்.பி.யாக்கினால்தான் சரிப்படும் என்ற முடிவோடு, தனது சம்பந்தி மூலமாக சுப்ரமணிய சுவாமியை அப்ரோச் செய்திருக்கிறார். குஷியான சு.சுவாமியும், வைகுண்ட ராஜனுக்காக பிஜேபி மேலிடத்தில் குடைச்சல் கொடுத்து வருகிறாராம்.

அதிமுக பிஜேபி கூட்டணியில் அதிமுகவும் இணைந்துவிடும் என்ற நம்பிக்கையில் தான், தனது மகனுக்காக, நெல்லை எம்.பி. தொகுதியை குறி வைத்திருக்கிறார் டிடிவி தினகரனின் ஆதரவாளரான வைகுண்டராஜன். 

click me!