ஆளுங்கட்சி... எதிர்கட்சிகளை திணறடித்த மது குடிப்போர் சங்கம்... அதிரடி அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published Feb 21, 2019, 4:17 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பது பற்றி தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் பரபரப்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பது பற்றி தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் பரபரப்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தொகுதி பங்கீட்டு தொடர்பாக அரசியல் கட்சிகள் பரபரப்பில் மூழ்கியிருக்கின்றன. உதிரி கட்சிகள் கூட்டணியில் இடம் பிடிக்க முக்கிய கட்சிகளை வளைய வருகிறார்கள். அரசியல் களம் அனல் அடிக்கத் தொடங்கியிருக்கும் வேளையில் செம கூலாக அறிக்கை விட்டு தலைச் சுற்ற வைத்திருக்கிறது தமிழ் நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம். 

இந்தச் சங்கம் யாருடன் கூட்டணி அமைக்கும் என அதகளப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அச்சங்கத்தின் தலைவர் பி. செல்லப்பாண்டியன். அவர் வெளியிட்ட அறிக்கை இதுதான்: 61.4 சதவீதம் டாஸ்மாக் பிரியர்களின் சார்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பு இது.  

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் சேரும் எந்தக் கட்சியுடனும் தமிழ்நாடு மதுகுப்போர் விழிப்புணர்வு சங்கம் சேராது. ஆதரிக்காது. 61.4 சதவீதம் டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி சேரும். இல்லையேல் தனித்தே தேர்தலை சந்திக்கும். இவ்வாறு அறிக்கை வெளியிட்டு முக்கிய கட்சிகளை திணறடித்திருக்கிறார் பி. செல்லப்பாண்டியன். 

click me!