’ரொம்ப நம்பியிருந்தேன்.. ஒண்ணாக்கூடி ஒதுக்கி வைச்சிட்டாங்களே...’ கடும் குழப்பத்தில் டி.டி.வி..!

By Thiraviaraj RMFirst Published Feb 21, 2019, 4:37 PM IST
Highlights

முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏறக்குறைய கூட்டணியை உறுதி செய்து விட்டன. ஆனால், கட்சி ஆரம்பித்தது முதல் எழுச்சி நாயகனாக வலம் வந்த, நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்த டி.டி.வி.தினகரன் மட்டும் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிர்ச்சியில் உறைந்து போய் கிடப்பதாக கூறப்படுகிறது.
 

முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏறக்குறைய கூட்டணியை உறுதி செய்து விட்டன. ஆனால், கட்சி ஆரம்பித்தது முதல் எழுச்சி நாயகனாக வலம் வந்த, நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்த டி.டி.வி.தினகரன் மட்டும் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிர்ச்சியில் உறைந்து போய் கிடப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜகவை தவிர வேறு யாரும் செல்ல மாட்டார்கள். அனைவரும் கூட்டணிக்கு நம்மிடம் மட்டுமே வருவார்கள் என நினைத்து இருந்தார் டி.டி.வி.தினகரன். நினைத்ததற்கு மாறாக கூட்டணி திசை மாறிப்போனதால் சசிகலா மட்டுமல்ல மன்னார்குடி வகையறாக்கள் அனைவரும் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள். கமல் கட்சி, விஜயகாந்த் கட்சியாவது கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்திருந்த தினகரனுக்கு மேலும் அதிர்ச்சி. விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், கமல் டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என வெளிப்படையாகவே கூறிவிட்டார். 

இதனால், மக்களவை தேர்தலில் போட்டியிடுவதா?” அல்லது அமமுகவுக்கு பலமுள்ளதாக கணிக்கப்பட்டுள்ள சில தொகுதிகளில் மட்டும் களமிறங்குவதா? 21 தொகுதிகளில் மட்டும் சரியான ஆட்களை தேர்வு செய்து களமிறக்கி இடைத்தேர்தலில் சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றுவதா? என்கிற குழப்பத்தில் இருக்கிறாராம் டி.டி.வி.

 

எழுச்சியை ஏற்படுத்தியும் மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்க லெட்டர் பேடு கட்சிகள் கூட வரவில்லையே என்கிற ஆதங்கத்தில் இருக்கிறார்கள் அமமுக நிர்வாகிகள். அந்த அணியில் இருக்கும் சிலர் வீட்டை விட்டு வெளியேறவே தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சிலரோ இப்போதைக்கு விட்டு விடுங்கள். தொழிலை பார்த்து கொஞ்சம் தேறிய பிறகு வருகிறேன் என விலகி நிற்பதாகவும் தகவல். ஆனால், அமமுக நிர்வாகிகள் சிலரோ, ‘’எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கினாலும், களத்தில் குதிப்போம். எங்களது பலத்தை நிரூபிக்க இந்த தேர்தல் முக்கியமானது. எத்தனை சோதனைகள் தொடர்ந்தாலும் பின் வாங்க மாட்டோம்’’ என்கிறார்கள். 

click me!