31 ஆம் தேதிக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு இயந்திரங்கள்... தேர்தல் அதிகாரி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Mar 29, 2021, 10:05 AM IST
Highlights

தெரிவுசெய்யப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் அலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு 31-3-2021 க்குள் பிரித்து அனுப்பப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். 

சென்னை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குபதிவிற்கு தேவையான துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் அவர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்: இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு தேவையான துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணியை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. 

சென்னை மாவட்டத்தில் உள்ள  5911  வாக்குச் சாவடிகள் உள்ளன, இதில் 2157 துணை வாக்குச்சாவடிகள் அடங்கும், ஏற்கனவே வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்பட உள்ள 7908 வாக்குப்பதிவு எந்திரங்கள் 7908  கட்டுப்பாட்டு கருவிகள் 7454 VVPTA இயந்திரங்களை ஏற்கனவே கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. தற்பொழுது வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்பட உள்ள 7181 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 537 VVPTA இயந்திரங்கள் என துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எந்தெந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு எந்தெந்த இயந்திரங்கள் என கணினி குலுக்கல் முறையில் தெரிவு  செய்யப்பட்டது.

தெரிவுசெய்யப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் அலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு 31-3-2021 க்குள் பிரித்து அனுப்பப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். முன்னதாக சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்தும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் விளக்கப்பட்டது. அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களும் பெறப்பட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்தார். 
 

click me!