கருணாநிதியை நம்பி டிவி பெட்டியை உடைச்சேன்... கடைசியில் பார்த்தால்... ராதாரவி அம்பலப்படுத்திய திமுக போராட்டம்.!

Published : Mar 28, 2021, 09:12 PM IST
கருணாநிதியை நம்பி டிவி பெட்டியை உடைச்சேன்... கடைசியில் பார்த்தால்... ராதாரவி அம்பலப்படுத்திய திமுக போராட்டம்.!

சுருக்கம்

எத்தனையோ தயாரிப்பாளர்களை நடக்கவிட்ட கமல்ஹாசன், இன்று கோவை தெற்கு தொகுதியில் வீதி வீதியாக அலைகிறார் என்று நடிகர் ராதாரவி பேசினார்.  

புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து நடிகர் ராதாரவி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “பாஜகவில் சேர்ந்த பிறகுதான் இந்தி கற்க வேண்டும் என்ற ஆர்வமே வந்துள்ளது. இந்தி படித்திருந்தால் ஐஸ்வர்யாகூடவே நடித்திருப்பேன். இந்தியை கற்கக் கூடாது என்று கூறியது திமுகதான். ஆனால், அவர்களுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் இன்று இந்தி பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். 
இந்தி திணிப்பை கண்டித்து தூர்தர்ஷன் என்ற பெயரை மாற்ற மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தலைமையில்  தொலைக்காட்சிப் பெட்டியை உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. நாங்கள் எல்லாம் டிவியை எடுத்துக்கொண்டு சென்று ரோட்டில் போட்டு உடைத்தோம். ஆனால், கருணாநிதி உடைத்த  பெட்டியில் இயந்திரமே இல்லை. அந்த அளவுக்கு  ஏமாற்றுக்காரர்கள் திமுகவினர். நாட்டின்  வளர்ச்சியைப் பற்றி மட்டுமே  பாஜக சிந்திக்கிறது. நாட்டுக்குத் தேவையான கட்சி பாஜகதான். இந்தச் சின்ன ஊரைகூட காங்கிரஸ் கட்சியால் காப்பாற்ற முடியலை. இந்தியாவை எப்படி காப்பாற்ற முடியும்?
கமல்ஹாசன் கூட கட்சி தொடங்கிவிட்டார். தமிழ் சினிமாவில் முத்தக் காட்சியை அறிமுகப்படுத்திய பெருமை கமலைதான் சேரும். எத்தனையோ தயாரிப்பாளர்களை நடக்கவிட்ட கமல்ஹாசன், இன்று கோவை தெற்கு தொகுதியில் வீதி வீதியாக அலைகிறார்.” என்று ராதாரவி பேசினார்.

PREV
click me!

Recommended Stories

இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!
12 நிமிடத்தில் உரையை முடித்த விஜய்.. அப்செட்டான தொண்டர்கள்..!