இருசக்கர வாகனத்தில் ஈவிஎம் மெசின்.. ஐஜி தலைமையில் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் பிடிவாதம்.

Published : Apr 07, 2021, 04:09 PM ISTUpdated : Apr 07, 2021, 04:10 PM IST
இருசக்கர வாகனத்தில் ஈவிஎம் மெசின்.. ஐஜி தலைமையில் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் பிடிவாதம்.

சுருக்கம்

மேலும், தவறு நடத்திருப்பதை சத்யபிரதா சாகு உறுதி செய்தார் எனவும்,  இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றது தொடர்பாக விசாரிக்கப்படும் எனவும், முதற்கட்டமாக 3 பேரை பணி இடைநீக்கம் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.   

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது குறித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடும் புகார்  அளிக்கப்பட்டது. வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் ஆருன், வழக்கறிஞர் நவாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர் சூரிய பிரகாசம் ஆகியோர் புகார் மனுவை தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சூரிய பரகாசம், இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க உடனடியாக ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டு அனைத்து காட்சிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்ட காவல்துறை ஆய்வாளரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.  

மேலும், தவறு நடத்திருப்பதை சத்யபிரதா சாகு உறுதி செய்தார் எனவும்,  இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றது தொடர்பாக விசாரிக்கப்படும் எனவும், முதற்கட்டமாக 3 பேரை பணி இடைநீக்கம் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். வேளச்சேரி தொகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற தவறுகள் நடைபெற்றிருக்கலாம் என  தெரிவித்த சூரியபிரகாசம், இது குறித்த நேரத்திற்குள் விசாரணை நடத்தப்பட வில்லை எனில் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் சார்... தில் இருந்தா எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு எங்களோடு தேர்தலில் மோதிப்பாருங்கள்..! ஆதவ் சவால்..!
உங்களால பலபேர் இறந்திருக்கிறார்கள்... புதுவை மாநாட்டில் புஸ்ஸி ஆனந்திடம் சீறிய பெண் காவல் அதிகாரி