
ஊரடங்கு விதிகளை முழுமையாக கடைபிடித்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்றி அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தியுள்ளார். சென்னை செளகார்பேட்டையில் தனியார் அறக்கட்டளை சார்பாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 35 படுக்கைகள் மற்றும் 5 சாதாரண படுக்கைகளை மக்கள் பயன்பாட்டிற்காக இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் அறக்கட்டளை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக 35 ஆக்ஸிஜன் வசதி மற்றும் 5 சாதாரண படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தேன், இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் முழு மருத்துவ செலவுகளை இந்த அறக்கட்டளையே ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்தார்.
இதுபோன்ற மருத்துவமனைகள் தொடங்க தன்னார்வலர்கள் முன் வர வேண்டும் என்றார். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என அவர், இந்த மருத்துவமனை நாளை முதல் முழு வீச்சில் செயல்படும் என தெரிவித்தார். லும் ஊரடங்கு விதிகளை முழுமையாக கடைபிடித்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்றி அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.