கோவை தெற்கு தொகுதிக்கு மறு வாக்குஎண்ணிக்கை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. வானதிக்கு அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published May 14, 2021, 4:18 PM IST
Highlights

கோவை தெற்கு தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கோவை தொகுதியில் சுயேட்டையாக போட்டியிட்ட இந்துஸ்தான் ஜனதா கட்சியின் தென் மண்டல தலைவரான கே.ராகுல் காந்தி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.  

கோவை தெற்கு தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் சுயேட்டையாக போட்டியிட்ட இந்துஸ்தான் ஜனதா கட்சியின் தென் மண்டல தலைவரான கே.ராகுல் காந்தி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.  

அவர் மனுவில், தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 53 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்ற வானதி சீனிவாசன்  வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டதாகவும்,  தனக்கு 73 வாக்குகள் மட்டுமே பதிவானதாக அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக வானதி சீனிவாசனுக்கு எதிராக எதிர்ப்பலை நிலவிய சூழலில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்புவதாக மனுவில் தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்துதான் மூலம் தான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென மே 3ஆம் தேதியே தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

எனவே தனது மனுவை பரீலித்து, மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இந்த தொகுதியில் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் முந்திய வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.  

 

click me!