கொரோனா 2-வது அலையை வெல்வது எப்படி..? மீண்டும் வெளி வந்த சித்த வைத்தியர் தணிகாசலம்..!

Published : May 14, 2021, 02:13 PM IST
கொரோனா 2-வது அலையை வெல்வது எப்படி..? மீண்டும் வெளி வந்த சித்த வைத்தியர் தணிகாசலம்..!

சுருக்கம்

கொரானாவை என் உடலில் செலுத்துங்கள் நான் கண்டுபிடித்த மருந்தை உண்டு ஒரு வாரத்தில் குணமாக்கி காட்டுகிறேன் என் மீண்டும் சமூக வலைதளங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார் சித்த மருத்துவர் தணிகாசலம். 

கொரானாவை என் உடலில் செலுத்துங்கள் நான் கண்டுபிடித்த மருந்தை உண்டு ஒரு வாரத்தில் குணமாக்கி காட்டுகிறேன் என் மீண்டும் சமூக வலைதளங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார் சித்த மருத்துவர் தணிகாசலம். 

சென்னை கோயம்பேட்டில் சித்த மருத்துவமனை வைத்திருப்பவர் தணிகாசலம். இவர் கடந்த முறை கொரோனா வந்தபோது “கொரோனாவுக்கு நான் மருந்து வைத்திருக்கிறேன். சீனாவுக்குத் நான் சொன்ன மருந்துதான் கை கொடுத்தது. தமிழ்நாடு முதல்வர் என்னிடம் 2 பேரை கொரோனா சிகிச்சைக்கு அனுப்பி வைத்திருந்தார், அவர்களையும் குணப்படுத்தி விட்டேன்”என சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த வீடியோக்கள் வெளியான அதே வேளையில், “கொரோனா தொடர்பாக வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனச் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்து வந்தது. தணிகாசலம் அளித்த சிகிச்சையால் பாதிக்கப்பட்டதாக இருவர் புகார் செய்தனர். அதன்படி சுகாதாரத் துறை அளித்த புகாரின் பெயரில், நோய்த்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட அவர், 7 மாத காலம் வரை சிறையில் இருந்தார். பின்னர் வெளியில் வந்த அவர் கொரோனா இரண்டாவது அலைக்கு மருந்து உள்ளதாக கூறி வருகிறார். அதில் தும்லை இலை, குப்பைமேனி, நெல்லி இலை, துத்தி இலைகளை மென்று சாரு குடித்தால் 2வது அலையை வெல்லலாம் எனக் கூறி இருக்கிறார். 

PREV
click me!

Recommended Stories

TVK vs ADMK: விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.! என்ன செய்ய வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி
AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்