கொங்கு மண்டலத்தில் நுழையும் சசிகலா.! ஓகே சொன்ன அதிமுகவினர்.. பயத்தில் எடப்பாடி.!!

By Raghupati RFirst Published Mar 30, 2022, 10:39 AM IST
Highlights

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஒவ்வொரு அடியாக பார்த்து பார்த்து வைக்கும் சசிகலா தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டைக்குள் நுழைய திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார்.

சசிகலாவின் ஆன்மிக பயணம் :

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சாவூருக்கு சென்றார். சாலை மார்க்கமாக திட்டமிடப்பட்டுள்ள பயணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களையும் தனது ஆதரவாளர்களையும் அவர் சந்தித்து பேசினார். 

இது அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகிய இருவருக்கும், குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் தலைவலியை கொடுத்தது. இது ஆன்மீக சுற்றுப்பயணம் என்றாலும் அரசியல் ரீதியாக தனது ஆதரவு திரட்டவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக தகவல் வந்தது.

சேலம் வரும் சசிகலா :

இந்நிலையில், மூன்றாம் கட்ட சுற்றுப்பயணமாக வி.கே.சசிகலா அடுத்தவாரம் அதாவது ஏப்ரல் முதல் வாரம் சேலம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சேலம் செல்லும் அவர் அதிமுக அதிருப்தி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருப்பதாகவும் , அதனுடன் வழக்கம் போல கோவில்களுக்கும் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கண்காணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி : 

சசிகலாவின் சேலம் பயணத் திட்டம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் தொடர்ந்து கவனித்து வருகிறது. தனது ஆதரவாளர்கள் யாரும் முகாம் மாறிவிடக்கூடாது என்பதில் கருத்தாக இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆதரவாளர்கள் அனைவரிடமும் எந்தவொரு அதிருப்தி தொண்டர் அதிமுகவில் இருந்தாலும், அவர்களை சமாதானம் செய்யுங்கள். 

அப்படி ஆகவில்லை என்றால், என்னிடம் கூட்டி வாருங்கள்.நான் சமாதானம் செய்கிறேன் என்று கூறினார் என்றும் கூறுகிறார்கள். சசிகலா சேலம் வரும்பொழுது பெரிய கூட்டம் கூடாத அளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். 

click me!