தேர்தலில் நிற்பது இதற்காகத்தான்... உண்மையை போட்டுடைத்த விஷால்!

Asianet News Tamil  
Published : Dec 04, 2017, 03:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
தேர்தலில் நிற்பது இதற்காகத்தான்... உண்மையை போட்டுடைத்த விஷால்!

சுருக்கம்

vishal taking about r.k.nager election

ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியும் எதிர் கட்சியுமான திமுக.,விற்கும் மிக பெரிய போட்டி நிலவும் என்கிற தகவலை விட, நடிகர் விஷால் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளது தான் மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய உள்ள விஷால் இன்று காலை பயபக்தியுடன் கோவிலுக்கு சென்று பின் முதலாவதாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் சிவாஜி சிலை, எம்.ஜி.ஆர் சமாதி மற்றும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

ஏற்கனவே துணிந்து நின்று நடிகர் சங்க தேர்தலிலும், தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ள விஷால்... தற்போது அதே எண்ணத்துடன் தான் இந்த தேர்தலில் களமிறங்கி உள்ளாரா என பலருக்கும்  சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே  தென்னிந்திய நடிகர் சங்கத்தில் போட்டியிட்டும் , தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டும் வெற்றி பெற்று அதிரடி நடவடிக்கைகள் பலவற்றை எடுத்தார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில்  தற்போது அவர்,  ஏன்  இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் என்பதை தெரிவித்துள்ளார்.  மேலும் விஷால் இந்த தேர்தலில் போட்டியிடுவது அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்பதற்காக இல்லையாம் . அங்குள்ள மக்களில் ஒருவனாக தான் நான் நிற்கிறேன் என்பதை நிரூபிப்பதற்காக தானாம்.
 மேலும் ஆர் .கே .நகர் மக்களின்  தேவைகளை செய்து கொடுக்கும் பிரதிநிதியாகத்தான் நான் இருப்பேன். அந்த மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக தான் போராடுகிறார்கள்.

அதை செய்துகொடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம். ஜெயிக்கிறோம், தோற்கிறோம் என்பது முக்கியமல்ல என அவர் இன்று காலை பிரபல வானொலியில்  தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!