
அ.தி.மு.க. அமைச்சரவையில் எல்லா அமைச்சர்களும் வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்குபவர்கள் என்று சொல்லிவிட முடியாது. சிலர் கழுவும் நீரில் நழுவும் மீன்கள்! சிலரோ அப்படி நழுவியதிலும் கண்ணுக்கு தெரியாமல் மீண்டும் கடலுக்குள் எஸ்கேப் ஆகுபவர்கள். அதற்கு சரியான உதாரணம்தான் தங்கமணி. விஷால் பற்றிய கேள்வியை ஜஸ்ட் ஒரு சின்ன கையசைப்பில் கடந்து சென்றிருக்கிறார் இந்த கோல்டன் பெல்.
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தங்கமணியை சூழ்ந்து கொண்ட நிருபர்களிடம் அவர்கள் கன்னியாகுமரியில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு வருகிறது இன்னும் 2 நாட்களில் முழுமையாக சூழல் சரியாகிவிடும் என்றார். பின் அம்மாவின் அரசு புயல் மழை விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருப்பதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வாரிய உபகரணங்களை வைத்திருப்பதாகவும், தமிழகத்தில் எங்கே என்ன சூறைக்காற்று வீசினாலும் அசுரவேகத்தில் மின் நிலை சரிசெய்யப்படும் என்று பெருமைப்பட்டார்.
கன்னியாகுமரியில் இப்படியொரு புயல்மழையை எதிர்பார்த்தே ஏற்கனவே அங்கே மின்கம்பங்களை கொண்டு இறக்கியிருந்ததையும் சொல்லி காலரை தொடாமலே உயர்த்திக் கொண்டார்.
இந்த சூழலில் அவரிடம் ‘ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவதால் ஏதாவது பின்னடைவு இருக்குதா?’ என்று கேட்டதற்கு சின்னதாய் சிரித்தபடியே மைக்குகளை லேசாய் தள்ளியபடி நகர்ந்தவர் “ஆர்.கே.நகர் தொகுதி அம்மாவின் கோட்டை அங்கே எங்கள் கட்சிக்கான உறுதி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.” என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார்.
எடப்பாடியின் சம்பந்தின்னா ச்சும்மாவா! எஸ்கேபிசத்தில் எம்.டி. பண்ணிய டீமல்லவா!