சீட் கொடுக்காத அதிருப்தி... விருகம்பாக்கம் தனசேகரன் திமுகவில் இருந்து விலகல்... ஸ்டாலின் அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published Mar 12, 2021, 6:52 PM IST
Highlights

விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர்ராஜாவை மாற்ற வேண்டும் என தனசேகரன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
 

விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர்ராஜாவை மாற்ற வேண்டும் என தனசேகரன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பாக வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மகன் பிரபாகர்ராஜா போட்டியிடுகிறார். இந்நிலையில், வாழ்த்து பெற நேரில் சென்ற பிரபாகர்ராஜாவை கே.கே.நகர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர் கற்களால் தாக்கி விரட்டி அடித்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் சீட் கொடுக்காத அதிருப்தியில் தனசேகர் இந்த கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளார். 

இதனையடுத்து, அண்ணா அறிவாலயம் சென்ற தனசேகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-  விருகம்பாக்கம் தொகுதிக்கு பிரபாகரராஜாவை  வேட்பாளராக அறிவித்துள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் மறு பரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் ஸ்டாலின் தன்னை கை விடமாட்டார் என நம்புவதாகவும் தெரிவித்தார். பிரபாகரராஜா அதிமுக வுடன் இணக்கமாக இருந்தவர் என்றும் அவரின் இல்ல திருமண விழாவிற்கு துணை முதலமைச்சர்  ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களை அழைத்திருந்ததை சுட்டிக் காட்டினார்.

 

மேலும், தனது குடும்பத்தினர் திமுகவில் பொருப்புகளை வகித்து வருவதாகவும், திமுக விசுவாசிகள் எனவும் கூறிய அவர்,  தனது மனைவி சூரியன் சின்னம் பொறித்த தாளியை அணிந்துள்ளதாகவும், அந்தளவிற்கு கட்சிக்கு விசுவாசமானவர்கள் எனவும்  கூறினார். மேலும், தொகுதிகளில் உள்ள 80 சதவீத திமுக நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளோம் என தனசேகரன் கூறியுள்ளார். 

click me!