முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளவில்லை. அண்ணா பல்கலை கழகம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 12, 2021, 5:58 PM IST
Highlights

அதில், எம்.டெக். படிப்புக்கு பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என்றும், எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.டெக். படிப்புக்கு பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில்  எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக எம்.டெக். படிப்பில், மத்திய அரசின் நிதியுதவி பெறும் எம்.டெக். பயோ டெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூடேஷனல் டெக்னாலஜி பிரிவுகளில், 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நிர்பந்தித்ததை அடுத்து,  அந்த பாடப்பிரிவுகளை ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. 

இதை எதிர்த்து மாணவ - மாணவியர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டிருந்தது. இதன்பின்னர், அந்த இரு பிரிவுகளுக்கும் 49.5 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்தியதுடன், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற உத்தரவிற்கும், மாநில அரசு நிலைப்பாட்டிற்கும் எதிராக அண்ணா பல்கலைகழகம் எடுத்த நிலைப்பாடு குறித்து தமிழக அரசு தரப்பில் நீதிபதி பி. புகழேந்தி முன்பு முறையீடு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், எம்.டெக். படிப்புக்கு பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என்றும், எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முந்தைய ஆண்டுகளில் பின்பற்றத் பட்டதைப் போல, மத்திய அரசு இட ஒதுக்கீடு ஆணை 49.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று அறிவுறுத்திய நீதிபதி, மாநில அரசின் முடிவுக்கு விரோதமாக செயல்படக் கூடாது என அண்ணா பல்கலை கழகத்திற்கு  அறிவுறுத்தினார். மேலும் மாநில அரசின் முடிவுக்கு விரோதமாக செயல்பட்டால் பல்கலைக் கழகத்திற்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதி அளித்த நீதிபதி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறி உறுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளவில்லை என்று மத்திய அரசுக்குதெரிவிக்கும்படிஅண்ணாபல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்தினார். 

பத்து சதவீத ஒதுக்கீட்டு மாணவர்கள் இல்லாமல் புதிய பட்டியலை வழங்கும்படி மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டுமென அண்ணா பல்கலைகழகத்தின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதி, மத்திய அரசின் 49.5 சதவீத ஒதுக்கீட்டின் படி மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், மேற்கொண்டு எந்த உத்தரவை பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக கூறி முடித்து வைத்தார். 

 

click me!