ஜெர்க்காகும் அதிமுக அமைச்சர்கள்... ட்விஸ்ட் வைக்கும் டி.டி.வி.தினகரன்!

By Thiraviaraj RMFirst Published Mar 12, 2021, 6:26 PM IST
Highlights

ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரை எதிர்த்து சி.பி ராமஜெயமும் ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து காளிமுத்துவும் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து கார்த்தி பிரபாகரனும் போட்டியிடுகிறார்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அதிரடியாக களமிறங்கிய டிடிவி தினகரன், அண்மையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் டிடிவி தினகரன் இடம் பெறவில்லை. இதையடுத்து, நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதன் படி, டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்து களம் காணவிருப்பது தெரிய வந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதியாக இருந்த கோவில்பட்டியில், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுகவே வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு தினகரன் போட்டியிடுவதால் போட்டி இன்னும் கடுமையாகி இருக்கிறது. இந்த நிலையில், அமமுகவின் 130 வேட்பாளர்கள் கொண்ட மூன்றாம் கட்ட பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டார்.

அதன்படி, ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரை எதிர்த்து சி.பி ராமஜெயமும் ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து காளிமுத்துவும் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து கார்த்தி பிரபாகரனும் போட்டியிடுகிறார்கள். அதே போல, இன்று காலை திமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த அய்யா துரை பாண்டியனுக்கு கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 

click me!