AMMK: முதல்வர் ஸ்டாலின் கூறிய பிறகும் அதிகார அத்துமீறல்கள்.. என்ன பதில் சொல்லப்போகிறது திமுக? TTV விளாசல்..!

By vinoth kumarFirst Published Dec 8, 2021, 6:31 AM IST
Highlights

திருவேற்காடு அம்மா உணவகத்திலிருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படம் தி.மு.க.வினரால் அகற்றப்பட்டது கண்டனத்திற்குரியது. அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது சரியானதல்ல. 

திருவேற்காடு அம்மா உணவகத்திலிருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படம் திமுகவினரால் அகற்றப்பட்டது கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

 திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் மீண்டும் கருணாநிதி படம் வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது. அங்கு ஜெயலலிதா உருவ படம் இருந்த நிலையில், அதை மறைத்து கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் படங்களை திமுகவினர் ஒட்டினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த அதிமுகவினர், திமுகவினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

இதனையடுத்து அங்கு வந்த போலீஸார் இரு தரப்புக்கும் சமரசம் செய்தனர். இதன்பின்னர் ஜெயலலிதா படம் மீது ஒட்டப்பட்டிருந்த கருணாநிதியின் படம் அகற்றப்பட்டது. இந்நிலையில், திருவேற்காடு அம்மா உணவகத்திலிருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படம் திமுகவினரால் அகற்றப்பட்டது கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அம்மா உணவகத்திலிருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படம் தி.மு.க.வினரால் அகற்றப்பட்டது கண்டனத்திற்குரியது. அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது சரியானதல்ல. 

‘அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்’ என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறிய பிறகும் இத்தகைய அதிகார அத்துமீறல்கள் நடைபெறுவதற்கு தி.மு.க அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? (2/2)

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்’ என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறிய பிறகும் இத்தகைய அதிகார அத்துமீறல்கள் நடைபெறுவதற்கு தி.மு.க அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என  டிடிவி.தினகரன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!