கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் குமார் என்பவர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்று பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகுலு தெரிவித்துள்ளார்.
கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் குமார் என்பவர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்று பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகுலு தெரிவித்துள்ளார். சென்னை போரூர் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி வாகன சோதனையில் கஞ்சா கடத்தி வந்த 2 இளைஞர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து அந்த இளைஞர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கர்நாடக வனத்துறையினரை கைது செய்யனும்.. தமிழ்நாடு மீனவர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
அப்போது அவர்கள் தங்களை பத்திரிகையாளர் என்று கூறி போலியான அடையாள அட்டையை காண்பித்ததோடு திருவேற்காட்டை சேர்ந்த வினோத் குமார் என்பவரை தங்கள் தலைவர் எனவும் அவரும் பத்திரிகையில் ஆசிரியராக வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதை அடுத்து காவல்துறையினர் வினோத் குமாரை கைது செய்தனர். மேலும் அவர் பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் என கூறப்பட்டது.
இதையும் படிங்க: சிவசேனாவை பறிகொடுத்த உத்தவ் தாக்கரே.. கொண்டாட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே - தேர்தல் ஆணையம் என்ன சொன்னது.?
மேலும் அவருக்கு உதவியாக இருந்த அவரது உறவினர்கள் தேவராஜ், பாலாஜி உள்ளிட்டோரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட வினோத் குமார் என்பவர் பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார் என்று வெளியான செய்திக்கு பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகுலு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் வினோத் குமார் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.