சீமானின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பதமில்லை! வெடித்துக் கிளம்பும் வியனரசு டீம்!!

Published : Sep 29, 2018, 04:25 PM ISTUpdated : Sep 29, 2018, 04:27 PM IST
சீமானின்  பேச்சுக்கும், செயலுக்கும் சம்பதமில்லை! வெடித்துக் கிளம்பும் வியனரசு டீம்!!

சுருக்கம்

ஊரிலுள்ள பஞ்சாயத்துக்கெல்லாம் மீசையை முறுக்கிக் கொண்டு கருத்து சொல்லும் நாம் தமிழர் கட்சிக்குள் மீண்டும் மிகப்பெரிய பிளவு நடந்திருக்கிறது. இதை பற்றி மூச் காட்டாமல் இருக்கிறார் சீமான்! என்கிறார்கள். 

ஊரிலுள்ள பஞ்சாயத்துக்கெல்லாம் மீசையை முறுக்கிக் கொண்டு கருத்து சொல்லும் நாம் தமிழர் கட்சிக்குள் மீண்டும் மிகப்பெரிய பிளவு நடந்திருக்கிறது. இதை பற்றி மூச் காட்டாமல் இருக்கிறார் சீமான்! என்கிறார்கள். 

ஆம், அக்கட்சியிம் மாநில ஒருங்கிணைப்பாளரும், சீனியர் அரசியல் பார்வையாளருமான வியனரசு பெரும் அதிருப்தியில் இருக்கிறார் சீமான் மேல். திருநெல்வேலியில் சீமான் நடத்திய முப்பெரும் விழாவை அவர் புறக்கணித்திருப்பதே இதன் சாட்சி! என்கிறார்கள் அக்கட்சியின் நடுநிலைவாதிகள். 

வியனரசுவிடம் கேட்டபோது ‘ஆம் கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மைதான்’ என்றிருக்கிறார். 

சீமான் மீது வியனரசு அதிருப்தி கொள்ள காரணங்களாக சுட்டிக்காட்டப்படும் விஷயங்கள்...

*கமல்ஹாசன் அரசியல் கட்சி துவக்கியபோது அவரது  வீட்டிற்கே சென்று சீமான் சந்தித்ததை வியனரசு விரும்பவேயில்லை. அப்போதே அவர்களுக்குள் மோதல் துவங்கிவிட்டது. 

*ஸ்டெர்லைட் போராட்டத்தில் வியனரசு உட்பட பலர் சிறையில் இருமாதங்கள் இருதனர். அப்போது சீமான் வந்து பார்க்கவேயில்லை. 

*தன் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரை ஜாமீனில் கூட சீமான் எடுக்க முனையவில்லை. 

*ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல இதுவரையில் சீமான் அங்கு செல்லவில்லை. அந்த பிரச்னை பற்றி வாயே திறக்கவில்லை. 

இது போன்ற காரணங்களாலேயே வியனரசு சீமான் மீது கடும் அதிருப்தியிலும், ஆதங்கத்திலும் இருக்கிறார். அது ஆத்திரமாகவே மாறியிருக்கிறது. எனவே அய்யநாதன் போல் இவரும் நாம் தமிழர் கட்சியை பிளக்கலாம் என்கிறார்கள். 

பழைய நிகழ்வுகளை சுட்டிக்காடி சீமான் பேசும் அரசியல் கருத்துக்களின் பின்னணியில் வியனரசு இருக்கிறார்! இவர் நாம் தமிழர் கட்சியில் இருப்பது கருத்துக்கள், சித்தாந்தங்கள், சமூக பிரச்னைகளில் எடுத்து வைக்க வேண்டிய பார்வைகள்  ஆகியவை ரீதியாக அக்கட்சிக்கு பெரும் சப்போர்ட்டாக அமைகிறதாம்.

அப்பேர்ப்பட்ட மனிதனை வெற்று ஈகோவால் சீமான் வெறுப்பது நாம் தமிழர் கட்சிக்கு நேரம் சரியில்லை என அர்த்தம்! என்கிறார்கள் விமர்சகர்கள். அதேநேரத்தில் வியனரசுவின் ஆதரவாளர்களோ ‘சீமான் ஒரு போலி சித்தாந்தவாதி. அவரது பேச்சுக்கும், செயலுக்கும் சம்பதமில்லை. 

பத்து மாதங்களுக்கு முன் தான் வைத்த வாதத்தை பிறகு தானே மறுத்து, முரணாக நடக்கிறார். ரஜினியின் அரசியலை இதுவரையில் எதிர்த்தவர் கூடிய விரைவில் அவரை ஆதரித்து, துண்டு போடுவார் பாருங்கள்.” என்று தலையிலடிக்கிறார்கள். 
சீமான் அண்ணே! என்னாச்சு?

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!