அதிர்ச்சி... தேமுதிக பாமக இடையே சரமாரி மோதல்..!! சட்டை கிழிய கிழிய அடித்துக்கொண்டனர்.

Published : Oct 22, 2019, 09:18 AM ISTUpdated : Oct 22, 2019, 11:29 AM IST
அதிர்ச்சி... தேமுதிக பாமக இடையே சரமாரி மோதல்..!!  சட்டை கிழிய கிழிய அடித்துக்கொண்டனர்.

சுருக்கம்

தேமுதிகவுடன் பங்கு பிரித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு சென்றனர். ஆனால் பாமக   தனக்கு கணிசமான தொகை எடுத்துக்கொண்டு மீதித் தொகையை தேமுதிக தொண்டர்களுக்கு கொடுத்ததாகத் தெரிகிறது,  இதனால் ஆத்திரமடைந்த தேமுதிகவினர் பணத்தை சமமாகப் இருக்கவேண்டுமென கோரினார் ஆனால் பாமக அதைக் கேட்கவில்லை, 

பணத்தை பங்கு பிரிப்பதில் பாமக மற்றும் தேமுதிக தொண்டர்கள் இடையே விக்கிரவாண்டி தொகுதியில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. விக்ரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது,  அதில்  திமுகவின் சார்பில்  புகழேந்தியும், அதிமுகவின் சார்பில்  முத்தமிழ்ச் செல்வனும் நேருக்குநேர்  போட்டியிடுகின்றனர்.

 

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் அதன் தொண்டர்கள் பூத் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.  எனவே நேற்று காலை கல்யாணம் பூண்டி என்ற கிராமத்தில் வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.  மதிய உணவு இடைவேளையின் போது திடீரென்று பாமக,தேமுதிக தொண்டர்களிடையே சட்டை கிழியும் அளவிற்கு  கைக்கலப்பு ஏற்பட்டது.  உடனே அங்கிருந்த காவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து பிரச்சினையை தீர்த்தனர்.

உணவு இடைவேலையில் இரு தரப்பினரும்  நேற்று மதியம் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அங்கு வந்த  அதிமுகவினர், பூத் பணிக்கான பணத்தை பாமாகவிடம் கொடுத்து தேமுதிகவுடன் பங்கு பிரித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு சென்றனர். ஆனால் பாமக   தனக்கு கணிசமான தொகை எடுத்துக்கொண்டு மீதித் தொகையை தேமுதிக தொண்டர்களுக்கு கொடுத்ததாகத் தெரிகிறது,  இதனால் ஆத்திரமடைந்த தேமுதிகவினர் பணத்தை சமமாகப் இருக்கவேண்டுமென கோரினார் ஆனால் பாமக அதைக் கேட்கவில்லை, 

உடனே இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு  அது கைகலப்பாக மாறியது. அப்போது கூறிய பாமகவினர் அதிகமாக உழைத்தது நாங்கள்தான் அதனால் சமமாக பிரிக்க முடியாது என கூறினர், சம மாக பிரிக்காவிட்டால் நடப்பதே வைறு என்று தேமுதிகவினர் எச்சரித்தனர் இதுவே பிரச்சனைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!