அந்த 1600 எம்பிபிஎஸ் சீட்டு என்னாச்சு..!! கொந்தளிக்கும் மருத்துவர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2019, 8:09 AM IST
Highlights

மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய தொகுப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய 1600 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கவில்லை. இந்த 1600 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களிலும் அதிக அளவில் முன்னேறிய வகுப்பினரே சேர்ந்து வருகின்றனர்.இதே போன்று, சமூக நீதிக்கு எதிரான நிலைதான் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையிலும் நடைபெறுகிறது.

அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ மற்றும் பல் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைப்பது சரியல்ல எனவும் , அவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும்  மருத்துவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்  இது குறித்து தெரிவித்துள்ள அவர்கள்.

அகில இந்தியத் தொகுப்பு முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களைத் தவிர ,மாநில அரசுகளின் பல் மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுதப் பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. ஆனால், உயர்சாதிகளில் உள்ள பொருளாதார ரீதியில் பின் தங்கியோருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அகில இந்தியத்  தொகுப்பில்  ,மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் ,மாநில அரசின் கல்வி நிறுவனங்களிலும் வழங்கப்பட்டுள்ளது.இதனால் இதர பிற்படுத்தப் பட்டோர் மிகவும் பாதிக்கப் படுவர். இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு சமூக நீதியை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதைப்போலவே,அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.  இந்தியா முழுவதும் ஏறத்தாழ 6000 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் அகில இந்தியத் தொகுப்பில் உள்ளன.  இதில் உயர்சாதிகளில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடை முறைப் படுத்தப்படுகிறது. பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, இந்த இடங்களில் எஸ்.சி, எஸ்.டி  பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. 

பல முறை இது குறித்த கோரிக்கைகளை முன்வைத்த பிறகும் ,மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய தொகுப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய 1600 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கவில்லை. இந்த 1600 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களிலும் அதிக அளவில் முன்னேறிய வகுப்பினரே சேர்ந்து வருகின்றனர். இதே போன்று, சமூக நீதிக்கு எதிரான நிலைதான் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையிலும் நடைபெறுகிறது. இது கண்டனத்திற்குரியது. 

இந்நிலையில் முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதார ரீதியில் பின் தங்கியோருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடை  வழங்குவது இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கும்  அநீதியாகும். எனவே, இதர பிற்படுத்தப் பட்டோருக்கு அகில இந்தியத் தொகுப்பு இளநிலை மற்றும் முதுநிலை  மருத்துவ மற்றும் பல் மருத்துவ  இடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ,டாக்டர்கள் சங்கம் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது. மேலும், மக்கள் தொகைக்கேற்ப இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

click me!