எந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்!

By Asianet TamilFirst Published Oct 22, 2019, 7:15 AM IST
Highlights

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நீங்கள் எந்த பொத்தானை அழுத்தினாலும், அது தாமரைக்கே விழும். எங்களை யாரும் ஏமாற்ற முடியாது.” என்று பேசியிருந்தார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையானதை அடுத்து, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பொத்தனை அழுத்தினாலும், தாமரையில்தான் ஓட்டு விழும் என்று பேசிய ஹரியானா மாநில பாஜக வேட்பாளரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேலி, கிண்டல் செய்திருக்கிறார்.  
ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் அசாந்த் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் பக்‌ஷி‌‌ஷ் சிங் விர்க் பேசிய காணொலி காட்சி சமூக ஊடகங்களில் வாக்குப்பதிவு நாளான நேற்று ட்ரெண்டிங் ஆனது.  “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நீங்கள் எந்த பொத்தானை அழுத்தினாலும், அது தாமரைக்கே விழும். எங்களை யாரும் ஏமாற்ற முடியாது.” என்று பேசியிருந்தார்.

 
இந்த வீடியோ பெரும் சர்ச்சையானதை அடுத்து, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் பக்‌ஷிஷ் சிங் போட்டியிடும் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய தொழில்நுட்ப பார்வையாளர் ஒருவரையும்  தேர்தல் ஆணையம் நியமித்தது. இந்நிலையில் பக்‌ஷி‌‌ஷ் சிங் பேசிய வீடியோவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில் ‘பாஜகவில் உள்ள மிகவும் நேர்மையான மனிதர்’ என்றும் கேலி கிண்டலாக ராகுல் பதிவு செய்துள்ளார். இதற்கிடையே பக்‌ஷிஷ் சிங் பேசிய வீடியோ போலியானது என்று பாஜக தெரிவித்துள்ளது. 

click me!