வடமாநில தொழிலாளர் இதுவரை 27 ஆயிரம் பேர் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்காக தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
கடைகளில் தமிழில் பெயர் பலகை
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கூறினார். மகளிர்களுக்கு அநீதி, கொடுமைகள் நடந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு சட்டங்களை அரசு இயற்றி இருப்பதாக தெரிவித்தார். ரவுடிகளால் எந்த இடையூறு ஏற்பட்டாலும், ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வணிக சங்கபேரமைப்பு வலியுறுத்துவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கடைகளின் பெயர் பலகைகளை தமிழாக்கம் செய்ய வேண்டும் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வணிகர் சங்க பேரமைப்பு மனதார ஏற்றுக்கொண்டு கால அவகாசம் பெற்று கடைகளின் பெயர் பலகையை தமிழாக்கம் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
தொடரும் அதிமுக- பாஜக மோதல்..! மூத்த நிர்வாகிகளோடு எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
27 ஆயிரம் பேர் பயணம்
அதே நேரத்தில் அரசுத்துறை அலுவலங்களின் கடிதங்கள் ஆங்கிலத்தில் வருகிறது. இதனை முழுமையாக தமிழாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே அரசு முன்னேடுக்கின்ற நியாயமான நடவடிக்கைகளுக்கு வணிகர் சங்க பேரமைப்பு என்றும் துணை நிற்கும் என கூறினார். வடமாநில தொழிலாளர் இதுவரை 27 ஆயிரம் பேர் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்காக தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார்.முதலில் வட மாநில தொழிலாளர்கள் அச்சப்பட்டு வெளியேறினர். அரசும், வணிகர் சங்க பேரமைப்பும் நேரடியாக வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று தைரியப்படுத்தி ஆறுதல் சொன்ன பிறகு வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது கணிசமான அளவு குறைந்து உள்ளதாக தெரிவித்தார். சில இடங்களில் புல்லுருவிகள் விஷமதனத்தை செய்யக்கூடாது என வணிகர் சங்க பேரமைப்பு தெளிவாக இருப்பதாக கூறினார்.
இதையும் படியுங்கள்
அண்ணாமலை என்ன வேண்டும் என்றாலும் பேசட்டும், ஜெயலலிதா மாதிரி என பேச வேண்டாம்- ஜெயக்குமார் அதிரடி