அண்ணாமலை என்ன வேண்டும் என்றாலும் பேசட்டும், ஜெயலலிதா மாதிரி என பேச வேண்டாம்- ஜெயக்குமார் அதிரடி

By Ajmal Khan  |  First Published Mar 8, 2023, 1:02 PM IST

அதிமுகவில் விரும்பி சேர்வோரை ஏற்றுக் கொள்கிறோம். பாஜக மட்டுமல்ல திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் இருந்தும் அதிமுகவில் இணைகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் பெருந்தன்மையுடன் செயல்படுவது தான் அனைவருக்கும் நல்லது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளையும், நாளை மறுதினம் மாநில நிர்வாகிகள் கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 

Tap to resize

Latest Videos

அதிமுகவில் தொடர்ந்து இணையும் பாஜக நிர்வாகிகள்..! மாநில செயலாளரை தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி

அதிமுக சமுத்திரம்

கல்வீசினால் உடைவதற்கு அதிமுக ஒன்றும் கண்ணாடி இல்லை, சமுத்திரம் என தெரிவித்தார். எனவே சமுத்திரம் மீது கல் வீசுனால் கல் தான் காணாமல் போகும். அதிமுகவில் விரும்பி சேர்வோரை ஏற்றுக் கொள்கிறோம். பாஜக மட்டுமல்ல திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் இருந்தும் அதிமுகவில் இணைகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் பெருந்தன்மையுடன் செயல்படுவது தான் அனைவருக்கும் நல்லது. அசுர வேகத்தில் அதிமுக வளர்வதால் பிற கட்சியினர் அதிமுகவில் இணைவதாக தெரிவித்தார். தொண்டர்களை உணர்ச்சிவசப்படும் போது தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும். தலைவர்களே தொண்டர்களின் உணர்ச்சிகளை தூண்டக்கூடாது என தெரிவித்தார்.இதே போல அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் கிளர்த்து எழுந்தால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்

அட்ரஸ் இல்லாதவர்களுக்கு பதில் அளிக்க மாட்டோம்

  எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்தவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும். பாஜகவினரின் இது போன்ற செயல்கள் கண்டனத்துக்குரியது.  அண்ணாமலை என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஜெயலலிதா மாதிரி என பேச வேண்டாம். ஜெயலலிதா மாதிரி யாரும் கிடையாது. இனிமேலும் பிறக்க போவதில்லை. செஞ்சி கோட்டை ஏறுபவர்கள் ராஜ தேசிங்கும் இல்லை, மீசை வைத்தவர்கள் கட்டபொம்மனும் இல்லையென தெரிவித்தார். அதிமுக ஆட்சி 420 ஆட்சியென பாஜக நிர்வாகி கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தலைவர்கள் மட்டத்தில் பேசுபவர்களுக்கு பதில் அளிப்போம். அட்ரஸ் இல்லாதவர்களுக்கு பதில் அளித்து  விலாசம் கொடுக்க தேவையில்லை. என் நண்பர் வைத்திலிங்கம், சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்துவிட்டார். திருந்தி எடப்பாடி பழனிசாமி அணிக்கு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்

தொடரும் அதிமுக- பாஜக மோதல்..! மூத்த நிர்வாகிகளோடு எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

click me!