
பேச வேண்டியதை பேசாமலும், பேச கூடாததை பேசியும் மக்கள் வெறுப்பை சம்பாதிப்பவர்களில் அதிமுக எம்.பி, விஜிலா சத்யானந்தும் ஒருவர்.
நாடாளுமன்றத்தில் தமிழக நலன் குறித்து இவர் எதையாவது பேசி இருக்கிறாரா? என்று அதிமுகவினருக்கே தெரியாது.
ஆனால், ஜெயலலிதா மறைந்து சில நாட்கள் கழித்து கூடிய நாடாளுமன்ற கூட்ட தொடரில் பேசிய விஜிலா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், வெண்கல சிலை வைக்கவேண்டும், நோபல் பரிசுக்கு அவரதுபெயரை பரிந்துரைக்க வேண்டும் என்று பேசி பெரிய அளவில் நகைப்புக்கு ஆளானார்.
இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை என்பது கூட விஜிலாவுக்கு தெரியவில்லை என்று மற்ற எம்.பி க்கள் கேலி செய்தனர்.
அடுத்து ஊழல் வழக்கில் சிக்கி உள்ள ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க முடியாது என்றும் மறுக்கப்பட்டு விட்டது.
இதை தவிர அவர், வேறு எதையும் பேசியதாக அதிமுகவினர் கூட எதுவும் சொல்லவில்லை. ஆனால் மற்ற எம்.பி க்களிடம் நன்றாக வம்பு வளப்பார் என்று மட்டும் சொல்கின்றனர்.
அதனால், நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்றாலும், என்ன நடக்கிறது என்று கூட கவனிக்காமல், வருமானவரி சோதனை நடக்கும் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வந்து அங்கு இருக்கும் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் வம்பு செய்து ஒரே களேபரத்தை உண்டாக்கி உள்ளார்.
வருமான வரித்துறை சோதனையின் போது, மத்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் போலீசார், அதிகாரிகளின் அனுமதி இன்றி யாரையும் உள்ளே செல்லவும், வெளியே வரவும் அனுமதிக்க மாட்டார்கள்.
இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வந்த மத்திய போலீசாரும் அதைத்தான் செய்துள்ளனர். ஆனால் சில அமைச்சர்களும், எம்.எல்.ஏ, எம்.பி க்களும், உள்ளே அனுமதிக்கக்கோரி அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களோடு சேர்ந்து கொண்ட விஜிலா சத்தியானந்த் மத்திய போலீசாரை, உள்ளூர் பாஷையில் தாறு மாறாக திட்டியுள்ளார். இதனால், அந்த இடமே களேபரமாகி உள்ளது.
இதையடுத்து, தலையில் அடித்துக் கொண்ட அதிமுகவினர், அவரை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தி உள்ளனர்.
நாடாளு மன்றத்தில் பேசுவதில்தான் விஜிலாவுக்கு தடுமாறும் தவிர, உள்ளுக்கு பாஷையில் திட்ட சொன்னாலோ, சண்டை போட சொன்னாலோ வெளுத்து வாங்குவார் என்று அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.