சமக தொண்டர்கள் - போலீஸ் இடையே திடீர் தள்ளுமுள்ளு : சமாதானப்படுத்திய சரத்குமார்

 
Published : Apr 07, 2017, 03:38 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
சமக தொண்டர்கள் - போலீஸ் இடையே திடீர் தள்ளுமுள்ளு : சமாதானப்படுத்திய சரத்குமார்

சுருக்கம்

quarrel between police and sarathkumar cadres

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை 8 மணிமுதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சேப்பாக்கம் எம்எல்ஏ-க்கள் விடுதி மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி  வீடு ஆகிய இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 8 மணியிலிருந்து  அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். 

இந்நிலையில், கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள், வீட்டின் முன் குவிந்துள்ளனர்.

அப்போது வீட்டுக்குள்ளும் வெளியேயும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டின் வெளியில் கூடியிருந்த சமக தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதையடுத்து சரத்குமார் சமாதான முயற்சியில் ஈடுபட்டார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு