
அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கும், மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்று வரும் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவது தமக்கு மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்தார்.
பணம் மட்டுமல்லாமல் ஏராளமான பரிசுப் பொருட்களையும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழிசை தெரிவித்தார்
அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை என்பது அவர்களின் வழக்கமான பணி என்று தெரிவித்தார்.இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் இந்த ரெய்டில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் தமிழிசை உறுதிப்படத் தெரிவித்தார்