ஒரு சூரியன்.. ஒரு சந்திரன்.. இங்கு யாருக்கும் யாரும் நிகரல்ல.. இளையராஜாவிற்கு சப்போர்ட் செய்யும் விஜயகாந்த்.!

Published : Apr 20, 2022, 10:49 AM IST
ஒரு சூரியன்.. ஒரு சந்திரன்.. இங்கு யாருக்கும் யாரும் நிகரல்ல.. இளையராஜாவிற்கு சப்போர்ட் செய்யும் விஜயகாந்த்.!

சுருக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி மற்றும் சட்டமேதை அம்பேத்கார் குறித்து இளையராஜா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கருத்தை கூறியுள்ளார்.

சாதாரண குடும்பம்

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

ஒப்பிட முடியாது

அண்ணல் அம்பேத்கர், பிரதமர் நரேந்திர மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்றைக்கும் அவரவர்கள் துறையில் அனைவருக்கும் எடுத்து காட்டாக உள்ளனர். ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதேபோலதான் இங்கு யாரையும் யாருடன் ஒப்பிட்டு பேச முடியாது.

காயப்படுத்தாதீர்

அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக் கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என விஜயகாந்த் கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி