தமிழக அரசு- ஆளுநர் இடையே முற்றிய மோதல்...? அமித்ஷாவை சந்திக்க அவசரமாக டெல்லிக்கு விரைந்த ஆளுநர் ரவி

Published : Apr 20, 2022, 10:18 AM IST
தமிழக அரசு- ஆளுநர் இடையே முற்றிய மோதல்...? அமித்ஷாவை சந்திக்க அவசரமாக டெல்லிக்கு விரைந்த ஆளுநர் ரவி

சுருக்கம்

நீட் தேர்வு மசோதா மீது எந்த வித நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி  ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு, ஆளுநர் கான்வாய் மீது கருப்பு கொடு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து விளக்கம் அளிக்க  ஆளுநர் ரவி இன்று டெல்லி சென்றுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நீட் மசோதா

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவியேற்றதும் தமிழக சட்டமன்ற கூட்டத்தை கூட்டி நீட் தேர்விற்கு  விலக்கு அளிக்க கோரி மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த மசோதா மீது விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.இதனையடுத்து மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த மோசோதா தமிழக ஆளுநருக்கு அனுப்பி 200 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.  தமிழக ஆளுநரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இந்தநிலையில் தமிழக ஆளுநர் தமிழ் புத்தாண்டையொட்டி முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் புறக்கணித்து இருந்தன.நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழக ஆளுநர் மதிக்கவில்லையென்றும் குற்றம்சாட்டப்பட்டது.

ஆளுநர் விழாவை புறக்கணித்த அமைச்சர்கள்

இந்தநிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதாக உறுதியளித்திருந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் விழாவில் கலந்துகொள்ளாமல் ஆளுநரின் விழாவை புறக்கணித்தனர். மேலும் மயிலாடுதுறை சென்ற தமிழக ஆளுநர் ரவியின் கானவாய் மீது கற்கள் மற்றும் கருப்பு கொடி வீசப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தமிழக கவல் துறை மறுத்துள்ளது. ஆளுநர் வாகனத்தின் மீது கருப்பு கொடி வீசப்படவில்லையென்றும் கான்வாய் முழுவதுமாக சென்ற பிறகு போலீசார் வாகனத்தின் மீது கருப்பு வீசப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக ஆளுநர்- தமிழக அரசுக்கு இடையேயான மோதல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லிக்கு விரைந்த ஆளுநர்

இந்தநிலையில் தமிழக ஆளுநர் ரவி இன்று காலை விமானம் மூலம் டெல்லிக்கு சென்றுள்ளார். மத்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை ரவி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தமிழகத்தில் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனை, தமிழக அரசின் மோதல் போக்கு, ஆளுநர் கான்வாய் மீது கருப்பு கொடி வீச்சு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக ஆளுநர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீட் தேர்வு மசோதா தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசு- ஆளுநர் இடையேயான மோதலில் மத்திய அரசு தலையிட வேண்டும் என ஆளுநர் வற்புறுத்துவார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..