சசிகலாவை வரவேற்ற அமமுக முக்கிய நிர்வாகிகள் நீக்கம்.. டிடிவி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Apr 20, 2022, 8:38 AM IST
Highlights

சமீபகாலமாக சசிகலா- டிடிவி. தினகரன் இடையே மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. கடந்த 11ம் தேதி சேலம் செல்வதற்காக திருச்சிக்கு சசிகலா வந்தார். அப்போது அவர், திருச்சி சமயபுரம் கோயில் மற்றும் முசிறி பகுதிகளில் உள்ள உத்தமர் கோயில், திருவாசி சிவாலயம், குணசீலம் பெருமாள் கோயில், வெள்ளூர் சிவாலயம் உள்ளிட்ட கோயில்களில் தரிசனம் செய்தார். 

முசிறியில் சசிகலாவிற்கு வரவேற்பு அளித்த அமமுக நிர்வாகிகள் கட்சி பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா- டிடிவி. தினகரன் மோதல்

சமீபகாலமாக சசிகலா- டிடிவி. தினகரன் இடையே மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. கடந்த 11ம் தேதி சேலம் செல்வதற்காக திருச்சிக்கு சசிகலா வந்தார். அப்போது அவர், திருச்சி சமயபுரம் கோயில் மற்றும் முசிறி பகுதிகளில் உள்ள உத்தமர் கோயில், திருவாசி சிவாலயம், குணசீலம் பெருமாள் கோயில், வெள்ளூர் சிவாலயம் உள்ளிட்ட கோயில்களில் தரிசனம் செய்தார். 

வரவேற்பு

அப்போது அவரை திருச்சி வடக்கு மாவட்ட அமமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பாலகுமார், முசிறி தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் முசிறி நகர செயலாளர் ராமசாமி ஆகியோர் வரவேற்றனர். 

கட்சியில் இருந்து நீக்கம்

இந்நிலையில், பாலகுமார், செந்தில்குமார், ராமசாமி ஆகியோர் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக டிடிவி.தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். திருச்சிக்கு வரும் சசிகலாவை வரவேற்க அமமுக நிர்வாகிகள் யாரும் செல்லக்கூடாது என மேலிடத்தில் இருந்து ரகசிய உத்தரவு  வந்ததாகவும், ஆனால், கட்சி கோட்பாட்டை மீறி நடந்து கொண்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

click me!