ஒருத்தரையும் விடக்கூடாது.. 124வது பிரிவு சட்டத்தை பயன்படுத்துங்க.. ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி பரபரப்பு கடிதம்

Published : Apr 20, 2022, 08:11 AM ISTUpdated : Apr 20, 2022, 09:06 AM IST
ஒருத்தரையும் விடக்கூடாது.. 124வது பிரிவு சட்டத்தை பயன்படுத்துங்க.. ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி பரபரப்பு கடிதம்

சுருக்கம்

ஆளுநர் அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அத்துடன் அவருடைய வாகனம் மீது கொடிகள் ஆகியவற்றை வீச தொடங்கினர். எனினும் நல்வாய்ப்பாக ஆளுநர் அவர்களின் வாகனம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அங்கு இருந்து பத்திரமாக சென்றது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 124-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பணிசெய்ய விடாமல் வாகனத்தை நோக்கி கொடிகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் பி.சாஸ்கிரி கடிதம் எழுதியுள்ளார். 

ஆளுநருக்கு எதிர்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞானரத யாத்திரை புறப்பட்டார். இந்த நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைப்பதற்காக மயிலாடுதுறைக்கு சென்றார். ஆளுநர் ஆர்.என் ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். ஆளுநர் வந்தபோது அவருடைய வாகனம் மீது கொடி கம்புகள் வீசப்பட்டன. ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

காவல் துறை விளக்கம்

இந்த சம்பவத்திதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து  தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆளுநரின் வாகன அணிவகுப்பில்  கற்கள் மற்றும் கொடி வீசப்பட்டதாக கூறும் தகவல் உண்மையில்லை என தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவியை பணிசெய்ய விடாமல் வாகனத்தை நோக்கி கொடிகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை கோரி டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். 

நடவடிக்கை

அதில், தமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி என்ற முறையில் ஆளுநர் எங்கு சென்றாலும் அவருடன் நான் பாதுகாப்பிற்கு சென்று வருகிறேன். அந்தவகையில் நேற்று மாண்புமிகு ஆளுநர் மயிலாடுதுறையில் தர்மபுரம் ஆதினம் நிகழ்ச்சிகாக சென்றார். அவருடைய வாகனம் காலை 9.30 மணிக்கு திருக்கடையூரிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றது. அந்தக் காரில் நான் முன் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். ஆளுநர் அவர்கள் பின்பக்கத்தில் அமர்ந்தார். எங்களுக்கு முன்பாக பாதுகாப்பு கான்வாய் கார் சென்றது. சுமார் 9.50 மணியளவில் ஏவிசி கல்லூரி அருகே கூடியிருந்தவர்கள் சிலர் ஆளுநரின் கான்வாய் வாகனத்தை நோக்கி நெருங்கி வந்தனர்.

மேலும் அவர்கள் ஆளுநர் அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அத்துடன் அவருடைய வாகனம் மீது கொடிகள் ஆகியவற்றை வீச தொடங்கினர். எனினும் நல்வாய்ப்பாக ஆளுநர் அவர்களின் வாகனம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அங்கு இருந்து பத்திரமாக சென்றது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 124-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

124-வது பிரிவு என்றால் என்ன?

124-வது பிரிவு என்பது, குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் ஆகியோர் மீது தாக்குதல் மேற்கொள்ளுதல் அல்லது அவர்களது சட்டப்பூர்வ பணிகளை செய்யவிடாமல் தடுத்தல் போன்ற கிரிமினல் குற்றங்களை செய்வோருக்கானது. இந்த சட்டப்பிரிவின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி