
தனக்கு மடியில் கனமில்லை, எனவே வழியில் பயமில்லை. குட்கா போதைபொருள் பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பான், குட்கா போன்ற போதைபொருட்கள் விற்பனையை நாடு முழுவதும் தடை செய்யப்பட்டு மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் இந்த சட்டம் நடைமுறை படுத்தபட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பிலிருந்து பான், குட்கா போன்ற போதை பொருட்கள் தயாரிக்கும் நிறுவன்ங்கள் கொத்து கொத்தாக சிக்கின.
இதையடுத்து பல அதிர்ச்சியுறும் தகவல் வெளிவந்தன. அதாவது, பான், குட்கா அதிபர்களிடம் அமைச்சர் விஜய பாஸ்கர் , ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார் உள்ளிடோர் லஞ்சம் வாங்கியதாக ஆதரத்துடன் செய்திகள் பரவின.
இதைதொடர்ந்து, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த பிரச்சனையை சட்டசபையில் எழுப்பி அமளியில் ஈடுபட்டது. பின்னர் வெளிநடப்பு செய்த திமுகவினர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா இதுகுறித்து தனது துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த பிரச்சனை குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்க உள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா மற்றும் போதை பொருட்கள் குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பரப்பப்படுவதாகவும், தனக்கு மடியில் கனமில்லை எனவே, வழியில் பயமில்லை. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.