சிங்கமாய் கர்ஜித்து வந்த விஜயகாந்த் எப்போதாவது வந்து பேசமாட்டாரா? பிரச்சாரத்திற்கு வரமாட்டாரா என தேமுதிக தொண்டர்கள் ஏங்கிக் கொண்டிருக்க, விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கமாய் கர்ஜித்து வந்த விஜயகாந்த் எப்போதாவது வந்து பேசமாட்டாரா? பிரச்சாரத்திற்கு வரமாட்டாரா என தேமுதிக தொண்டர்கள் ஏங்கிக் கொண்டிருக்க, விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தால் பேச முடியாது. அவரது உடல்நலம் குறைந்ததால் இனி அவர் பிரச்சாரத்திற்கு வரமாட்டார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், பாஜக தலைமையிலான கூட்டணியில் சேருவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தமிழக அரசியலில் இப்போதும் நாங்கள் தான் மாற்று சக்தியாக இருக்கிறோம். இப்போது நடக்கும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். நிச்சயமாக மத்திய அரசில் இடம் பெறுவோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம்.
விஜயகாந்த் இப்போதும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வார். ஆனால், பேச மாட்டார். அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வந்தாலே போதும் என்று கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே, அவர் தொகுதி வாரியாக பிரசாரத்துக்கு வரும்போது, தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், எழுச்சியும் அடைவார்கள்.
விஜயகாந்த் விரைவில் தீவிர கட்சி பணியை மேற்கொள்வார். அவரது உடல்நலம் நன்கு தேறிவருகிறது. தேமுதிக வேட்பாளர்கள் பற்றி அவர் தான் முடிவு செய்வார்’’ என அவர் கூறினார். அவர் பேச்சை கேட்கமுடியாவிட்டாலும், விஜயகாந்தை பார்த்தாலே போதும் என்கிற மனநிலையில் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர் அவரது தொண்டர்கள். அதேவேளை விஜயகாந்தின் சிம்மக்குரலை இனி கேட்கவே முடியாதா? என பலரும் பரிதாபத்துடன் கேட்டு வருகின்றனர்.