ஒரேயொரு அறிவிப்பின் மூலம் மொத்த கவுரவத்தையும் இழந்து கிடக்கின்றன தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்டுகளும். அந்த அறிவிப்பு வேறொன்றுமில்லை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் யார்? என்பதுதான்.
ஒரேயொரு அறிவிப்பின் மூலம் மொத்த கவுரவத்தையும் இழந்து கிடக்கின்றன தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்டுகளும். அந்த அறிவிப்பு வேறொன்றுமில்லை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் யார்? என்பதுதான்.
தேர்தலுக்கு தேர்தல் தோள் மாறி சவாரி செய்யும் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இரு கட்சிகளும், தங்கள் தர்மத்தின்படி இந்த 2019 தேர்தலில் தி.மு.க.வின் முதுகில் தொற்றியிருக்கின்றனர். அதன்படி இருவருக்கும் தலா இரண்டு சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோயமுத்தூர், மதுரை இரண்டுக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் நாகப்பட்டிணம் இரண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்கள் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் மற்றும் எழுத்தாளர் சு.வெங்கடேசனை சி.பி.எம். அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டோ தங்கள் வேட்பாளர்களாக சுப்பராயன் மற்றும் செல்வராசு இருவரையும் அறுவித்துள்ளது. இதைத்தொடர்ந்துதான் அ.தி.மு.க.வின் இணையதள அணி இரண்டு கம்யூனிஸ்டுகளையும் வெளுத்து வாங்க துவங்கியிருக்கிறது இப்படி....
“திராவிட கட்சிகளின் வாரிசு அரசியல் மற்றும் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களின் குறுநில அரசியல்...என்றெல்லம் வாய்கிழிய பேசும் கம்யூனிஸ்டுகளே! நீங்களும் அதைத்தானே செய்யுறீங்க. நான்கு தொகுதிகளிலும் புதிய மற்றும் இளம் நபர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு உங்களுக்கு மனசில்லை அப்படித்தானே? மார்க்சிஸ்டின் கோயமுத்தூர் தொகுதி நடராஜன் கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் இதே தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர்.
கடந்த தேர்தலில் இவர்தான் வேட்பாளர். இப்போதும் இவரே வேட்பாளரென்றால், கோவை மார்க்சிஸ்டில் அடுத்த நபர்களே கிடையாதா? எழுத்தாளர் வெங்கடேசனுக்கு வாய்ப்பு கொடுத்ததன் மூலம் மார்க்சிஸ்ட் பாதி பாவத்தை கழித்துள்ளது. ஆனால் இந்திய கம்யூனிஸ்டோ தனக்கு கிடைத்த இரண்டு தொகுதிகளிலும் ஏற்கனவே அதிகாரத்தை அனுபவித்தவர்களையே மீண்டும் கொண்டு போய் நிறுத்துகிறது. நாகை தொகுதியின் செல்வராசுவுக்கு வயது 62 ஆகிறது. ஏற்கனவே மூன்று முறை எம்.பி.யாக இருந்தவர்.
இதுபோக இப்போது கட்சியின் தேசிய குழு உறுப்பினராகவும், நாகை மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். இவ்வளவு அதிகாரத்தை அனுபவித்த, அனுபவித்துக் கொண்டு இருக்கிற நபருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு தர வெட்கமாக இல்லையா? வேறு ஆளா இல்லை உங்கள் இயக்கத்தில்! திருப்பூர் வேட்பாளர் சுப்பராயனுக்கு வயது 72. கட்சியின் மத்திய நிர்வாக குழு உறுப்பினர், மாநில துணை செயலாளர் என்று பெரும் பதவிகளில் இருக்கிறார். இது போக ஏற்கனவே எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. பதவிகளை நன்றாகவே அனுபவித்தவர்.
அவரையே மீண்டும் வேட்பாளர் நாற்காலியில் உட்கார வைக்கிறீர்களே! இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்போம், புதிய முகங்களுக்கு வாய்ப்பளிப்போம், இந்த நபர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு சான்ஸ் தருவோம் என்றில்லாமல் ஏற்கனவே ஆண்டவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு தரும் நீங்களெல்லாம் ஜனநாயகத்தை பற்றி பேசுவது அசிங்கம். இனி அ.தி.மு.க.வின் எந்த நடவடிக்கையையும் பற்றி பேச உங்களுக்கு எந்த அருகதையுமில்லை. உட்கட்சியில் ஜனநாயகத்தை போற்ற முடியாத நீங்கள், எங்களைப் பார்த்து ‘சர்வாதிகாரம்! ஆண்டவர்களே ஆள்கிறார்கள்’ என்றெல்லம் பேச எந்த தகுதியுமில்லை. 60 வயதை கடந்து சீனியர் சிட்டிசன்களாகிவிட்ட ரிட்டயர்டு கேஸுகளையெல்லாம் வேட்பாளராக்கி கட்சியை அசிங்கப்படுத்துகிறார்கள்! என்று உங்கள் கட்சியினரே உங்களை தூற்றுவது காதில் விழுகிறதா டியர் காம்ரேட்ஸ்?” என்று போட்டுத் தாக்கியுள்ளனர். நெசமா தோழர்?!