"ஓபிஎஸ் சரியில்லை...!!!" - விஜயகாந்த் பளீர் பேட்டி

Asianet News Tamil  
Published : Feb 02, 2017, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
"ஓபிஎஸ் சரியில்லை...!!!" - விஜயகாந்த் பளீர் பேட்டி

சுருக்கம்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் ஆட்சி சரியில்லை என்று விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவகொழுந்து இல்லத் திருமணம் நடந்தது . இந்த  விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துக்கொண்டார். 

விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களுக்கு  அளித்த  பேட்டி.:

மத்திய பட்ஜெடை தமிழக அரசு வரவேற்று உள்ளதே?

அவர் வரவேற்க தான் செய்வார்.. இந்த பட்ஜெட்டில் நல்லதும் இருக்கு கெடுதலும் இருக்கு இரண்டும் கலந்து தான் இருக்கு.

தமிழகத்தில் முதல்வர் ஆட்சி எப்படி இருக்கு?.

அது நீங்கள் சொன்னாதான் தெரியும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆட்சி சரியில்லை. 

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைபாடு எப்படி இருந்தது?

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக கட்சி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைத்து. ஆனால் தமிழக அரசு முந்திக்கொண்டது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுவி இருகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளனர்.?

தமிழக அரசு மத்திய அரசு சொல்வதை கேட்டுக்கொண்டு சொல்லுகிறார்களா இல்லை மத்திய அரசிடம் இருந்து தப்பிக்க இது போன்று சொல்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.

ஒசாமா பின்லேடன் படம் இருந்ததாக முதலமைச்சர் கூறியுள்ளாரே?

அப்படி எல்லாம் இல்லை , அப்படி எதுவும் வாட்ஸ் அப்பில் வரவில்லையே. 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை  மாணவர்கள் மீது தடியடி நடத்தியது ?

மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தவறு .

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை  தொடர்ந்து நடைபெற்று வருகிறது?. 

விவசாயிகள் தற்கொலை தொடர்பாக விரிவான அறிக்கையை நான் கொடுத்துள்ளேன்.

PREV
click me!

Recommended Stories

21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..