தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்த்.. எனக்கு நெருங்கிய நண்பர்.. பிரதமர் மோடி உருக்கமான இரங்கல்..!

By vinoth kumar  |  First Published Dec 28, 2023, 11:37 AM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் 18ம் தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து டிசம்பர் 11ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

Tap to resize

Latest Videos

இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், விஜயகாந்திற்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதை அடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இவரது  மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்த் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியை அறிந்து மனவேதனை அடைந்தேன். தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பு கோடி கணக்கான இதயங்களைக் கவர்ந்தவர். ஒரு அரசியல் தலைவராக தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். பொதுச் சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 

எனக்கு நெருங்கிய நண்பராக விஜய்காந்த் இருந்தார். பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூறுகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார். 

click me!