
தொழிலாளர் தினத்தை ஒட்டி, மே 1 ம் தேதி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு ஊரில் கூட்டத்தை நடத்தி தங்கள் இருப்பை பதிவு செய்தன.
அதே வரிசையில், நாங்களும் ஆக்டிவாகதான் இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்ளும் வகையில், திருப்பூரில் தேமுதிக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், விஜயகாந்த் கலந்து கொள்வதாகவே இல்லை. ஆனால், அவர் மனைவி பிரேமலதா வற்புறுத்தியதால் பேரில் விஜயகாந்தும் அந்த கூட்டத்திற்கு சென்றுள்ளார்.
உங்கள் உடல்நிலையை காரணம் காட்டி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக பேசி வருகின்றனர். ஆகவே, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நீங்கள் பேசவேண்டும் என்று அவர் விஜயகாந்திடம் கூறி இருக்கிறார். அதற்காகவே, விஜயகாந்தும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
கூட்டத்தில் பேசிய பிரேமலதா, கேப்டன் உடல்நிலை பற்றி யாராவது கேட்டார்கள் என்றால் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஒரு அறை விடுங்கள் என்று பேசி தமது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அவருக்கு பின்னர் பேச ஆரம்பித்த விஜயகாந்த்தால் சில நிமிடங்கள்கூட பேச முடியவில்லை. அவர் கண்களில் இருந்து தண்ணீர் வந்துகொண்டே இருந்தது.
கூட்டத்தில் இருந்து சத்தம் வந்துகொண்டே இருக்கிறது. நான் பேசுவது கூட எனக்கு கேட்கவில்லை. அதனால், என்னுடைய உரையை இத்துடன் முடித்து கொள்கிறேன் என்று அவர் ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்.
என்ன கேப்டன் இப்படி ஆகிவிட்டாரே? என்று அடுத்த விநாடியிலேயே தொண்டர்கள் அனைவரும் கலைய ஆரம்பித்து விட்டனர்.
மற்ற கட்சிகளின் விமர்சனத்திற்கு ஏற்ப, விஜயகாந்த் பேச முடியாமல் போனதால், அவர் மனைவி பிரேமலதாவின் முகம் மாறிப்போய்விட்டது.