செந்தில் பாலாஜிகிட்ட கேட்டுச் சொல்லுங்க அவரு எப்போ தூக்குல தொங்கப்போறாருன்னு? விஜயபாஸ்கர் அதிரடி...

By sathish kFirst Published Jul 1, 2019, 12:55 PM IST
Highlights

நீங்களே அவரிடம்  கேட்டு சொல்லுங்க போட்ட சவாலில் தோற்றதற்காக தூக்கில் தொங்கத் தயாரா?  என்று கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடியாகத் தெரிவித்தார். 

அ.ம.மு.க.வில் இருந்து திமுகவில் சேர்ந்ததும் கருத்து சொன்ன அமைச்சரும் செந்தில் பல்ஜியின் பரம எதிரியான விஜயபாஸ்கர், தினகரனையும் கூடவே பதினேழு  எம்.எல்.ஏ.க்களையும் இந்தாளு (செந்தில்பாலாஜி) நடுத்தெருவில் நிறுத்துவிட்டார்ன்னு. அது என்னைக்கோ உண்மையாகிடுச்சு, இப்போ என்னடான்னா நடுத்தெருவில் அவங்களை நிறுத்திட்டு இவரு வேற கட்சிக்கு தாவுறார்.  பதவிக்காக என்ன வேணா பண்ணுவார். அட தமிழ்நாட்டுல மட்டுமில்லைங்க, ஆந்திராவில் யாராச்சும் இவருக்கு அமைச்சர் பதவி தர்றேன்னு சொன்னால் கூட அங்கேயும் ஓடிப்போயிடுவார் என செந்திலை செம்ம வாங்கு வாங்கினார்.

விஜயபாஸ்கர் பேசியது செந்தில் பாலாஜியின் காதுக்கு போக,  நான் மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் வந்த சமயத்தில் கார் கதவை திறந்துவிட்டபடி, கையில் மஞ்சள் பையுடன் அலைந்தவர்தான் அந்த விஜயபாஸ்கர் என்னப்பத்தி இப்படி பேசுறதா? மஞ்சபையை வச்சிக்கிட்டு பின்னாடியே சுத்தி வந்தது, கார் கதவ திறந்துவிட்டது மறந்து போச்சா?  தமிழ் நாட்டுல நீ எந்த தொகுதி போனாலும் உன்னை விட மாட்டேன், உனக்கு எதிரா நிக்கிற திமுக வேட்பாளரை எத்தனை கோடி செலவானாலும் ஜெயிக்க வைப்பேன். உன்ன மண்ணை கவ்வ வைப்பேன். நான் யாருன்னு காட்டுறேன் என சபதம் போட்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டட கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட , தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,  தி.மு.க-வில் இணைந்த அமமுக பிரமுகர் செந்தில் பாலாஜி, அமைச்சர் எப்பொழுது பதவி விலகுகிறார்?னு என்னைப்பற்றி செய்தியாளர்களாகிய உங்களிடம் கேட்கச்சொல்லி வலியுறுத்துவதாகக் கேள்விப்பட்டேன். கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது, நான் அவ்வாறு சவால் விட்டது உண்மைதான். ஆனால், அங்கே நான் பேசியது என்ன?, `அமமுகவில் இருந்துகொண்டு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக செந்தில் பாலாஜி மீண்டும் வெற்றி பெற்றுவிட்டால், நான் அரசியலில் இருந்து விலகத் தயார்ன்னு சொன்னேன் அது,  உண்மைதான்.

ஆனா அதை இப்போது, `இல்லை' என்று நான் மறுக்கவில்லை. அதேசமயம், தற்போது திமுக-வில் இணைந்துதான் செ.பா சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். அவர் சொன்னபடி அமமுக விலிருந்து அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தால், நான் விட்ட சவால்படி, நான் எனது பதவியை ராஜினாமா செய்திருப்பேன். ஆனா செந்தில் பாலாஜி திமுக சார்பில் ஜெயிச்சிட்டு,  என்னை அரசியலிலிருந்து விலகச் சொல்வது எப்படி சரியாக இருக்கும்? ஆனால், அவர்தான் அமமுக-வில் இருந்தபோது,  தினகரன் முதலமைச்சராக அரியணையில் அமர முடியாவிட்டால், நான் தூக்கில் தொங்குவேன் என்று பேசி சவால் விட்டார். ஆனா, தினகரனால் இப்போது கட்சியைக்கூட பாத்துக்க முடியல. அப்புறம், எங்கே அரியணை ஏறுவாரு? அதனால செய்தியாளர்களாகிய நீங்க செந்தில் பாலாஜிகிட்ட கேட்டுச் சொல்லுங்க அவரு தூக்கில் தொங்கத் தயாரா? என்று கேட்டுள்ளார்.

click me!