ஸ்டாலினை சிபிஐ தேடிக் கொண்டிருக்கிறது!! பகீர் கிளப்பிய சி.வி.சண்முகம்...

By sathish kFirst Published Jul 1, 2019, 12:48 PM IST
Highlights

திமுக தலைவர் ஸ்டாலினை சிபிஐ விசாரிக்க இருக்கிறது, எனவே முதலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்  என சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
 

திமுக தலைவர் ஸ்டாலினை சிபிஐ விசாரிக்க இருக்கிறது, எனவே முதலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்  என சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கடலூரில் பேசிய ஸ்டாலின்,   தற்போது சட்டமன்றம் கூடுகிறது. என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ, யாம் அறியோம் பராபரமே. இந்த ஆட்சி நீடிக்குமா அல்லது அதற்கு முன் கவிழ்ந்து விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் சொல்கிறேன் இந்த ஆட்சி விரைவில் கவிழப்போகிறது என்பதுதான் உண்மை என்று பேசினார். அதேபோல,நேற்று விழுப்புரத்தில் பேசிய ஸ்டாலின், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தாதது என்பது புலி பாய்வதற்கு முன் பதுங்குவது போல என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஸ்டாலினின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில்; அதிமுக அரசு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். இந்த ஆட்சி மட்டுமல்ல; அடுத்த ஆட்சியும் அதிமுக ஆட்சிதான். அதனால், ஸ்டாலின் தன்னிடம் இருக்கும் அழுக்கை முதலில் அகற்ற வேண்டும்.

திமுக ஆட்சியிலே 2007 லிருந்து 2011 வரை வருடக் கால கட்டத்திலே கூட்டுறவு நகைக் கடன் பெற்றுத் தருவதாகவும், மகளிர் சுயஉதவி குழு நிதி வாங்கித் தருவதாகவும் சொல்லி 100 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக நாங்க சொல்லல, சென்னை உயர் நீதிமன்றம் இது பற்றி விசாரிக்க சிபிஐக்கு ஆணையிட்டுள்ளது. எனவே, ஸ்டாலினை சிபிஐ தேடிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் முதலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் , ஆட்சி கவிழும் என்று சொல்பவர்களின் டவுசர்தான் அவிழும் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

click me!